இ.கம்யூ., கொடியேற்று விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.கம்யூ., கொடியேற்று விழா

Added : நவ 11, 2019
Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, இ.கம்யூ., கட்சி கொடியேற்று விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி பஞ்., உட்பட்ட தலசூர் கிராமத்தில், இ.கம்யூ., கட்சி சார்பில், கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது. கிளை செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். தளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் லகுமைய்யா,

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, இ.கம்யூ., கட்சி கொடியேற்று விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி பஞ்., உட்பட்ட தலசூர் கிராமத்தில், இ.கம்யூ., கட்சி சார்பில், கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது. கிளை செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். தளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் லகுமைய்யா, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசினர். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும். வீடு இல்லாத பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க, பல்வேறு கட்ட போராட்டங்களை இ.கம்யூ., கட்சி நடத்தி வருவதாக கூறினர். 100க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, இ.கம்யூ., கட்சியில் இணைந்தனர். மாநில குழு உறுப்பினர் பூதட்டியப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X