பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு 400 கன அடி நீர்வரத்து

Added : நவ 11, 2019
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த மூன்று நாட்களாக வினாடிக்கு, 400 கன அடி என, சீரான நீர்வரத்து உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த, 7ல் வினாடிக்கு, 408 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 320 கன அடியும், வலது இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடியும் என மொத்தம், 408 கன அடி தண்ணீரும்

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த மூன்று நாட்களாக வினாடிக்கு, 400 கன அடி என, சீரான நீர்வரத்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த, 7ல் வினாடிக்கு, 408 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 320 கன அடியும், வலது இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடியும் என மொத்தம், 408 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில், நீர்பிடிப்பு பகுதியில், போதிய மழையின்றி, கடந்த, 8 முதல், நேற்று காலை வரை மூன்று நாட்களாக தொடர்ந்து, 400 கன அடியாக மட்டுமே அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர்இருப்பு உள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், வரும் நாட்களில் அணைக்கு நீர்வரத்து மேலும் சரியலாம் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X