பொது செய்தி

தமிழ்நாடு

'ரூ.482 கோடியில் 10 மாவட்டங்களில் 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்'

Added : நவ 11, 2019
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ''தமிழகத்தில், 482 கோடி ரூபாய் மதிப்பில், 10 மாவட்டங்களில், 64 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் அமைத்த, முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் புதிய கட்டுமான பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், காய்கறி, பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான, தொடர் வினியோக மேலாண்மை திட்டத்தில், 10 மாவட்டங்களில், 482 கோடி ரூபாய் மதிப்பில், தரம் பிரித்தல், சிப்பமிடுதல், தொடக்க நிலை குளிரூட்டுதல், மதிப்பு கூட்டுதல், சேமிப்பு கிடங்குகள் போன்ற வசதிகளுடன் கூடிய, 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 136 கோடி ரூபாய் மதிப்பில், 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரியில் புளி, காவேரிப்பட்டணத்தில் முள்ளங்கி, போச்சம்பள்ளியில் மா மற்றும் பல்வகை காய்கறிகள், குந்தாரப்பள்ளி, ஆலப்பட்டி, காமன்தொட்டி, கட்டிகானப்பள்ளி, ஓசூர், ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டையில், பல்வகை காய்கறிகளுக்காக, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. போச்சம்பள்ளியில், 50 லட்ச ரூபாய் மதிப்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி வாயிலாக தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X