பொது செய்தி

இந்தியா

அடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.





அயோத்தி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக சமீபத்தில் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது. 3 மாதங்களில் டிரஸ்ட் அமைத்து, ராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூறி இருந்தது.
இதனையடுத்து கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் டிரஸ்ட் அமைக்கும் பணியை மத்திய அரசு துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ராமர் கோயில் கட்டும் பணிகளையும் விரைவாக துவக்கவும், தாங்கள் வாக்குறுதி அளித்தபடி பிரம்மாண்ட ராமர் கோயில் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி அன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




2022ம் ஆண்டு உ.பி., தேர்தல் சமயத்தில் கோயில் பணிகளை முழுமையாக முடிக்க உ.பி., திட்டமிட்டுள்ளது. இதனால் ராமர் கோயில் அமைப்பதற்கு உள்ள அனைத்து தடைகளையும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நீக்கி வருவதாக கூறப்படுகிறது.
1989 ம் ஆண்டு முதல் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு வடிவமைத்த வடிவிலேயே கோயிலை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணியை விஷ்வ இந்து பரிஷித் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருந்து இந்து அமைப்புக்கள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்கள், ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
11-நவ-201921:00:36 IST Report Abuse
Rajan ஆமாங்க , 2024 லையும் ஹிந்துக்கள் தான், hundi இல்ல, மத மாற்றம் குஷ்டம், குண்டு வெக்க முடியாது, ngo fund இல்ல, முத்தலாக் ஆப்பு இனப்பெருக்கம் தடை, 370 நீக்கம் கல்லெறிதல் தடை, முஸ்லீம் சகோதரிகள் ஆதரவு, இதுவே ஹிந்துக்களை மீண்டும் மீண்டும் வெற்றி பெற வைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Sundar - Hartford,யூ.எஸ்.ஏ
11-நவ-201920:58:01 IST Report Abuse
Sundar அவ்வளவு ஒன்றும் பிரமாண்டமாக தெரியவில்லையே. டெல்லி அக்ஷர்தாமை விட பெரியதாக கட்ட வேண்டும். செய்வார்களா.
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
11-நவ-201919:05:15 IST Report Abuse
KavikumarRam ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X