அத்வானியை விடுவித்தது ஏன்?: ஒவைசி

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (106)
Share
Advertisement

ஐதராபாத் : அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது சட்ட விரோதம் என்றால் அதை இடித்த வழக்கில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சேர்க்கப்பட்டது ஏன்? பின்னர் விடுவிக்கப்பட்டது ஏன்? என ஏஐஎம்ஐஎம் அமைப்பின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.



latest tamil news



ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பாபர் மசூதி சட்டப்பூர்வமானது என்றால் அந்த நிலத்தை, மசூதியை இடித்தவர்களின் கைகளிலேயே ஒப்படைத்தது ஏன்? ஒருவேளை அது சட்ட விரோதமானது என்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானிக்கு எதிராக வழக்கு போடப்பட்டது ஏன்?
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டது ஏன்? பாபர் மசூதி சட்டப்பூர்வமானது என்றால் அந்த நிலத்தை எங்களிடம் ஒப்படையுங்கள். இது அடிப்படை கேள்வி. தீர்ப்பு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. பாபர் மசூதி எங்களின் சட்ட உரிமை. நாங்கள் மசூதிக்காக தான் போராடுகிறோம். நிலத்திற்காக அல்ல என்றார்.


latest tamil news



முன்னதாக ஒவைசி பதிவிட்ட டுவீட்டில், பல ஆண்டுகளாக வழிபாடு நடத்திய மசூதி இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் கோயில் கட்ட கோர்ட் அனுமதி அளித்து, அந்த நிலத்தை சட்ட விரோதமாக ராம்லல்லாவிற்கு கோர்ட் அளித்து விட்டது. மாற்று நிலம் கொடுத்து நாங்கள் அவமதிக்கப்பட்டுள்ளோம்.
எங்களை பிச்சைக்காரர்களை போல் நடத்த வேண்டாம். நாங்கள் இந்தியாவின் மதிப்பு மிக்க குடிமக்கள். எங்களின் சட்ட உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். நாங்கள் நீதி கேட்கிறோம். நன்கொடை கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-நவ-201922:30:28 IST Report Abuse
RajanRajan இத்தனை காலம் உங்களுக்கு கஞ்சி காய்ச்சின எங்கூரு சுடலை அண்ணாவே சொல்லிட்டர் உச்சநீதிமன்ற தீர்ப்பை எல்லோரும் ஏற்று கொண்டு அமைதி காக்கோணும்னு. அப்புறம் உனக்குமட்டும் என்ன பற்றி எரியுதாம்.
Rate this:
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
11-நவ-201922:08:45 IST Report Abuse
S.BASKARAN இந்த கிறுக்குப்பிடித்த ,வெறி பிடித்தவனை ஏன் இன்னும் பேச விடுகிறார்கள்? சுப்பிரிம் கோர்ட்டையே இவன் ஏளனப்படுத்துகிறான்.இவனை உள்ளே தள்ளவேண்டும் அல்லது நாடு கடத்தவேண்டும்.
Rate this:
Cancel
Manivannan.J - Chennai,இந்தியா
11-நவ-201921:17:38 IST Report Abuse
Manivannan.J நம் அனைவரும் இந்தியர்கள், கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். (கொடுத்துதது : ராமஜென்ம பூமி ) , திரும்ப வந்தது : அல்லாஹ்வை வணங்க இடம் 5 ஏக்கர், முஸ்லிம்கள் எங்கு அல்லாஹ்வை தொழுகிறார்களோ அங்கே எல்லாம் வல்ல அல்லஹ இருக்கிறார். ஒரு உலகம் , ஒரே மக்கள் , ஒரே ரத்தம் , நாம் எல்லாரும் ஒரு தாய்(உலகத்தின்) மக்கள் . ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X