இந்த செய்தியை கேட்க
சென்னை: மாணவர் முகேஸ், எங்கள் ரவுடி கும்பலில் சேர மறுத்ததால், அவரை துப்பாக்கியால் சுட்டேன் என கைதான விஜய் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகேசை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவரது நண்பர் விஜய், கோர்ட்டில் சரணடைந்தார். அப்போது, விளையாட்டாக சுட்டதாகவும், அதில் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாகவும் விஜய் கூறினார்.
இதுதொடர்பான வழக்கில், விஜயை நவ.,14 வரை காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில், பெருமாட்டுநல்லூர் பகுதியில் ரவுடி செல்வம் என்பவரது தலைமையில் செயல்பட்டு வந்த கும்பலில் விஜயும் இருந்துள்ளார். சம்பவத்தன்று, வீட்டிற்கு வந்த முகேசிடம் அந்த கும்பலில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். முகேஸ் மறுத்ததால் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு விஜய் தப்பியது தெரியவந்துள்ளது.
மேலும், தன் நண்பரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் மேலும், உண்மைகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
செல்வம் சரண்
இந்நிலையில், தேடப்பட்ட ரவுடி செல்வம், தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE