மோடியின் பெரிய வெற்றி: வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (103)
Advertisement
PM, Modi, AyodhyaVerdict, Media, பிரதமர், மோடி, அயோத்தி, தீர்ப்பு, பத்திரிகை, பாராட்டு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரிய வெற்றி என வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்திய தீர்ப்பு, நவ.,9ம் தேதி வெளியானது. இது குறித்து உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், இந்த தீர்ப்பு மோடிக்கு கிடைத்த பெரிய வெற்றி என பாராட்டியுள்ளன.
அமெரிக்க முன்னணி பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில், பல நூற்றாண்டுகளாக நீடித்த அயோத்தி விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மறுசீரமைப்பதில் மோடிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
மற்றொரு அமெரிக்க நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்', மோடியின் பெரிய வெற்றியான அயோத்தி தீர்ப்பின் மூலம், பாஜ.,வின் முக்கிய லட்சியம் நிறைவேறியுள்ளது, என பாராட்டியது.
பிரிட்டனின் 'கார்டியன்' நாளிதழில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி அமோக வெற்றி பெற்றார். அயோத்தி தீர்ப்பு மூலம் மீண்டும் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது, என வெளியிட்டது. ஆனால், பாகிஸ்தானின் நாளிதழ்களில் மட்டும், எதிர்மறையாக, அயோத்தி தீர்ப்பால் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் இடையிலான உறவு பாதிக்கப்படும் என செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-நவ-201910:19:41 IST Report Abuse
Palanisamy T உண்மைதான் இந்த வெற்றி மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட இந்தியாவின் உச்ச நீதி மன்றம் நீதித் துறையில் சக்தி வாய்ந்த அமைப்பாகவும், அரசையும் ஆட்சியாளர்களையும் கடந்த நிலையில் இந்திய மக்களின் நம்பிக்கைக் கூறிய,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு ஆட்சி மன்ற அமைப்பாகவும் இருப்பதை இந்திய மக்களுக்கு மெய்ப்பித்துள்ளது. இந்திய உச்ச நீதி மன்றத்தின் இந்த மிக முக்கியமான தீர்ப்புகளை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சில சமயங்களில் இந்தத் தீர்ப்புகள் அவர்களுக்கு ஒரு நல்ல வழிக்காட்டியாகவும் இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-நவ-201909:55:26 IST Report Abuse
pattikkaattaan திருவிளையாடல் படத்தில் நக்கீரரைப்பார்த்து தருமி கேட்பார் " இங்கு எல்லாமே நீர்தானா? " என்று .. அதுதான் நியாபகத்திற்கு வருகிறது ..
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-நவ-201909:27:42 IST Report Abuse
Appan இந்திய இந்துக்களின் நாடு..யாராவது மெக்காவிலோ, ரோமில் வேறு மதத்தினர் கோவில் கட்ட முடியுமா? முஸ்லிம்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து , மசூதிகள், சர்ச்கள் கட்டினார்கள்..ஏனென்றால் அப்போ அவர்கள் ஆளும் வர்கள்..இந்திய பிரஜைகள் அவர்களுக்கு அடிமைகள்..அடிமைகளுக்கு ஏது உரிமை? அயோத்திய ஆங்கிலேயர்கள் ஆட்சியிலே பிரச்சினை இருந்தது.அவர்கள் கண்டுக்கவில்லை. ஏனென்றால் இந்திய பிரஜைகளை ஆங்கிலேயர் ஆண்டார்கள்..அதாவது இந்தியர்கள் அடிமைகள்..யாராவது அடிமைகளை மதிப்பார்களா.? சுதந்திரம் வாங்கி 1949 லில் அங்கு கிருஷ்ணன் சிலை தடைகளை மீறி வைக்க பட்டது..இப்போ இந்துக்கள் அதிகாரத்திற்கு வந்து சரித்திர பிழையை நீக்கி உள்ளார்கள்.. இந்து தர்மம் சாதிவிகத்தை போதிக்கிறது..அதனால் போர் தளவாடங்களை அதிகம் உற்பத்திபண்ணவில்லை ..மாற்றாக இஸ்லாமியர்கள் மத்தை பரப்ப இந்தியாவில் படையெடுத்த்து வந்த வென்று இந்தியாவை ஆண்டார்கள்..சுமார் 800 ஆண்டுகள் அவர்கள் ஆண்டார்கள்..அவர்களால் பெரும் அளவில் இந்துக்களை மாற்ற முடியவில்லை.பின் ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்கு வந்து இந்தியாவை ஆண்டார்கள்.அப்போ இந்திய என்ற நாடு சுபிட்சமாக இருந்தும் , வெளிநாட்டவர்களை எதிர்க்கொள்ளமுடியவில்லை..உதந்திரம் வாங்கும் பொது இந்தியர்களின் life expectancy 50 ஆக இருந்தது..இப்போ வளர்ந்த நாட்களுக்கு இணையாக 80 இருக்கிறது..அதாவது ஒரு நாடு சுகந்திரமாக அவர்களே ஆண்டால் தான் நாடு சுபிட்சமாக இருக்கும்..இது இந்திய கூட்டாச்சிக்கும் பொருந்து..
Rate this:
Share this comment
KKsamy - Jurong,சிங்கப்பூர்
12-நவ-201919:15:07 IST Report Abuse
KKsamyஒரு 500 வருசத்துக்கு முன் எது இந்தியா....
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
13-நவ-201912:51:19 IST Report Abuse
ezhumalaiyaanசிங்கப்பூரை விட பழமையானது.நேற்றுதான் போரோ என்ற இடத்தில இந்தோனேஷியாவில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஹிந்து கோயில் பற்றிய விவரங்களை பார்த்து பிரமித்தேன் .தற்போதைய பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானம்,தாஷ்கண்ட்,அனைத்தும் பாரத தேசத்தில் அடக்கம்.அசோகர்,கனிஷ்கர் காலம் எப்போதையது என்று சரித்திர புத்தகம் படித்து அறியவும்....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
13-நவ-201913:01:57 IST Report Abuse
Chowkidar NandaIndia//ஒரு 500 வருசத்துக்கு முன் ஏது இந்தியா// உண்மை தான். 500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா என்பது இல்லை தான். ஆனால் அது பரதன் ஆண்ட பாரதம் என்ற பெயரோடு அகண்டு இருந்திருக்கிறது. அது எவராலும் மறுக்க முடியாத உண்மையும் கூட. அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏது இஸ்லாமும், கிறிஸ்துவமும் என்றும் கேள்வி கேட்கலாம் இல்லையா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X