இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணத்தை குறைக்க வேண்டும்; ஆடை அணிவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா நடந்த போதும் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மாணவர்கள் கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்ட போது இரு தரப்பினர் இடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டுள்ளது. போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து மாணவர்களை விரட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் கூறியதாவது: இங்கு படிப்பவர்கள் அதிகம் ஏழை மாணவர்கள் தான். அவர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் செலுத்த முடியும் ? பல ஆண்டுகளாக கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் குறைந்தபாடில்லை. தற்போது எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.