தேசியவாத காங்கிரசுக்கும் கவர்னர் அழைப்பு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (91)
Advertisement
Maharashtra, ShivSena, Congress, NCP, UddhavThacheray, CM, மஹாராஷ்டிரா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, முதல்வர்

இந்த செய்தியை கேட்க

மும்பை : மஹாராஷ்ட்டிராவில் 2 வது பெரிய கட்சியான ( 56 எம்எல்ஏ.,க்கள் ) கொண்ட சிவசேனா கட்சி கவர்னரை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கூடுதல் நேரம் தர முடியாது என கவர்னர் தெரிவித்துள்ளதாக சிவசேனாவின் ஆதித்யா தாக்ரே கூறியுள்ளார்.


ஆதித்யா தாக்ரே பேட்டி


கவர்னரை சந்தித்தபின் தாக்ரே மகன் ஆதித்யா அளித்த பேட்டியில் கூறியதாவது: பிற கட்சிகளுடன் பேசி வருகிறோம். எங்கள் கட்சியின் எம்எல்ஏ.,க்ள் கடிதத்தை கவர்னரிடம் வழங்கி உள்ளோம். பிற கட்சிகள் ஆதரவை பெற பேச வேண்டியுள்ளது. எனவே எங்களுக்கு கூடுதல் நேரம் தேவை என தெரிவித்தோம். ஆனால் கவர்னர் கூடுதல் நேரம் தர முடியாது என்கிறார். இது சட்டப்படி சரியல்ல. இருப்பினும் ஆட்சி அமைக்க தொடர்ந்து முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.





மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ., - சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வந்த நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜ., வை ஆட்சி அமைக்க அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜ., கூறிவிட்டதால், 2வது இடத்தை பிடித்த சிவசேனாவிற்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.





சிவசேனாவிடம் 56 இடங்கள் மட்டுமே இருந்தாலும், தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தேசியவாத காங்., தலைவர் சரத்பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, காங்., எடுக்கும் முடிவை பொறுத்து தான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என சரத் பவார் கூறினார்.
காங்., இடைக்கால தலைவர் சோனியாவுடன் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேசி ஆதரவு கோரினார். காங்., வெளியில் இருந்து ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் பாஜ., - சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. காங்., வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கையில் சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே இன்று கவர்னரை சந்திக்க கவர்னர் மாளிகைக்கு சென்றார்.






இதற்கிடையில் மஹா.,வில் ஆட்சியமைக்க வருமாறு அம்மாநில கவர்னர் , தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று இரவு கவர்னரை சந்தித்து பேச உள்ளதாக தேசியவாத காங்., மூத்த நிர்வாகி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-நவ-201914:39:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தாளு ஒரு எம் எல் ஏ கூட இல்லியே ?இவாளோட பதவிவெறியால் நாசம் மும்பைக்குத்தான் என்பது உண்மை நிலை கூட்டுலேந்துவிலகிய சிவசேனைவால் வந்த வினை இது பிஜேபி க்கே பதவி வரணும் என்று நிலை ஆனால் கர்நாடகாபொலவே கான் கிரேஸ் குழப்பம் செய்ரது அதுபோல சரத்பவார் ஒரு பிராடு சோனியாவும் பிராடுதான் இதுகளை நம்பாத சிவசேனையோ மஹா பிராடுதிலகம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-நவ-201914:37:58 IST Report Abuse
Nallavan Nallavan அந்தக் கடைசி போட்டோவுல, மணிமேகலை முகத்துல பரவசத்தைப் பார்த்தா, சரத் பவார் ஏதோ ஜோக்கு சொல்லிட்ட மாதிரி தோணுதே ??
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-நவ-201914:35:59 IST Report Abuse
Nallavan Nallavan "எல்லாமே வேஸ்ட்டு" என்று அறிந்துகொள்ள மக்களுக்கு அரிய வாய்ப்பு... நான் வேண்டுமென்றேதான் மஹாராஷ்டிர மக்களுக்கு என்று எழுதவில்லை... காரணம் இந்தத் தத்துவம் எங்கும் பொருந்தக் கூடியது) ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X