பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (36)
Advertisement
அயோத்தி, ராமர் கோவில், பணி, தீர்ப்பு, 2.77 ஏக்கர் நிலம், கட்டும் பணி, துவக்கம்

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்து கடவுளான ராமருக்கு கோவில் கட்டும் பணி, அடுத்தாண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமியில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்; அந்த இடத்தை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு நியமிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளையை, மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


அறக்கட்டளை


இதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமி வருகிறது. அன்று கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, 2.77 ஏக்கர் நிலம், புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைத் தவிர, அங்கு மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள, 62.23 ஏக்கர் நிலமும், அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.

இதில், ராம் ஜன்மபூமி நியாஸ் அமைப்பு மட்டும், 43 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது. அதைத் தவிர பல்வேறு அமைப்புகள், 20 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தன. இந்த நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலத்துக்காக, இழப்பீடு எதையும், ராம் ஜன்மபூமி நியாஸ் கோரவில்லை. இந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க அனுமதி கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில், ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தது.

தற்போது, ராம் ஜன்ம பூமி நியாஸ் உட்பட அனைத்து அமைப்புகளும், தங்களிடம் உள்ள நிலத்தை, மத்திய அரசு அமைக்க உள்ள அறக்கட்டளைக்கு ஒப்படைக்கத் தயாராக உள்ளன. அதேபோல், கோவிலுக்காக ஏற்கனவே தயார் செய்துள்ள, 1.80 லட்சம் கல் துாண்களையும் ஒப்படைக்க, நியாஸ் தயாராக உள்ளது. அடுத்தாண்டு, ஏப்., 2ல் இருந்து பணிகள் துவங்கும். அது கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவா அல்லது சிலை அமைப்பு விழாவா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


எதிர்பார்ப்பு


அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள அறக்கட்டளையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெற மாட்டார். அமைச்சர்கள் யாரையாவது அவர் நியமிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சன்னி வக்ப் வாரியத்துக்கு அளிப்பதற்காக, 5 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மசூதிக்கு யார் பெயர்?


ஹிந்து மதத் தலைவரான, மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ் கூறியதாவது: சன்னி வக்ப் வாரியத்துக்கு வழங்கப்பட உள்ள, 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் மசூதிக்கு, முஸ்லிம் தேசியவாத தலைவர்கள் அல்லது இஸ்லாம் நிறுவனரான முகமது சாஹப் பெயரை வைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், முஸ்லிம் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய நிலப் பகுதியில் மசூதி கட்ட முடியாது என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி. இஸ்லாத்தின்படி, சர்ச்சைக்குரிய இடங்களில், மற்ற மதத்தினரின் வழிபாடு இருந்த இடத்தில் மசூதி கட்டக் கூடாது. அதனால், இந்தத் தீர்ப்பால், ஹிந்துக்களைவிட, முஸ்லிம்களே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும், பெருந்தன்மையாக, 5 ஏக்கர் நிலம் வேண்டாம் என்று அவர்கள் கூறுவார்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா?


''அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதா, இல்லையா என்பது குறித்து, வரும், 17ல், முஸ்லிம் சட்ட வாரியத்துடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி தெரிவித்துள்ளார். 'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்; முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, வேறு ஒரு இடத்தை, அந்த மாநில அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என, உ.பி., மாநில, 'சன்னி வக்ப்' வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்துக்காக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களுடன், வரும், 14ல் ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


போனில் மிரட்டல்


உத்தரகண்ட் மாநிலம், வாரணாசியில் உள்ள, 'ஹர் கி பைரி காட்' எனப்படும், கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள படித்துறையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக, மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் செல்போனில் அழைத்து, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், படித்துறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


27 ஆண்டு சபதம் முடிவுக்கு வந்தது!


மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்தவர், ஊர்மிளா சதுர்வேதி, 81. இவர், சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'அயோத்தி விவகாரம் முடிவுக்கு வரும் வரை, பால் மற்றும் பழங்கள் தவிர, வேறு துவும் உண்ண மாட்டேன்' என, 1992ல் சபதம் மேற்கொண்டார். 27 ஆண்டுகளாக, தன் சபதத்தை கட்டிக் காத்து வருகிறார். இந்நிலையில், அயோத்தி விவகாரத்தில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, தன் சபதத்தை முடித்துக் கொள்வதாக, ஊர்மிளா சதுர்வேதி அறிவித்துள்ளார்.

மேலும், நுாற்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுத்தடித்து வந்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு நன்றி தெரிவித்து, அவர் கடிதம் எழுத போவதாக, அறிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-நவ-201921:29:35 IST Report Abuse
Rafi அங்கு கோவில் கட்டுவதற்கு பல காலம்மாகவே தூண்கள், மற்றும் இதர தயார்நிலையில் வைத்திருந்தார்கள், ஆகவே தான் நான் குறிப்பிட்டிருந்தேன் தீர்ப்பு மாற்றி வந்திருந்தால் பெரிய அளவில் நாட்டில் கலவரம் செய்யவும் முற்பட்டிருப்பார்கள். நீதிபதிக்கு நன்றி, அமைதி மார்க்கம் என்று நிரூபணம் ஆகியதற்கும், மேலும் எங்கள் மீதுள்ள கசப்பான கறைகள் துடைத்தெறிய பட்டுள்ளதற்காகவும்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
13-நவ-201914:12:56 IST Report Abuse
Chowkidar NandaIndiaஹிந்துஸ்தானில் இருக்கும் அதுவும் உலகம் போற்றும் ஸ்ரீ ராமர் பிறந்த இந்த இடம் எங்களுக்கு வேண்டாம் என்று அன்றைக்கே சொல்லியிருந்தால் உங்களை இந்த நாடே பாராட்டியிருக்கும். அரேபிய வந்தேறி பாபனின் பேரை சொல்லிக்கொண்டு வெற்றுபிடிவாதம் பிடித்துக்கொண்டு தீர்ப்பு வரும்வரை போராடி பார்த்து விட்டு இன்றைக்கு உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் உத்தமர்களை போல் பேசுவது எங்களுக்கு புரியாமலில்லை. எந்த ஒரு உருப்படியான காரணமுமில்லாமல் கோவை கலவரம், கோத்ரா கலவரம், மும்பை கலவரங்கள் என்று கலவரத்தையே தொழிலாக கொண்டிருக்கும் உங்கள் ஆட்கள் இன்று வேறுவழியின்றி அமைதி காப்பது மோடிஜி பிரதமராய் இருப்பதாலேயே என்பது மறுக்க முடியாத உண்மை. உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றபின் அவர் காஷ்மீர் சென்றபோது தீவிரவாதிகள் அடங்கி ஒடுங்கி எந்த கலவரமும் செய்யாமல் அமைதி காத்தது அதற்கு சாட்சி. இதுவே மத்தியில் வேறு ஒரு அரசாங்கம் இருந்தால் நடந்திருப்பதே வேறு. ஆக வீணாக உங்களை நீங்கள் உத்தமர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்காமல் இயல்பாகவே இருப்பது நல்லது. ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
14-நவ-201908:24:36 IST Report Abuse
ashak@Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா - சும்மா கதை விடாதீங்க, பாபர் படையெடுத்தது இப்ராஹிம் லோடியை எதிர்த்துதான், அதுவும் இப்ராஹிம் லோடியால் கஷ்டப்பட்ட மக்கள் சொன்னதால் தான், அப்பறம் பாபர் படையெடுத்தப்ப இந்தியா என்றொரு நாடே இல்லை, ராமர் பிறந்த இடத்தை சரியாக கூறமுடியுமா? என்ற கேள்விக்கு முடியாது என்பதே வாஜ்பேயின் பதில். பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படுகிறது, ராமர் எங்கேயும் தான் பிறந்த இடத்தில் தான் கோவில் கட்டவேண்டும் என்று சொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் மூன்று லட்சம் வருடத்திற்கு முன் ராமர் பிறந்தார் என்று சொல்கிறீர்கள், அதற்க்கான ஆதாரம் எங்கே என்றால் இல்லை. குஜராத் கலவரம், முஸாபிர் நகர் கலவரம், பாபரி மஸ்ஜித் இடிப்பு, பன்னிரண்டு தொடர் குண்டுவெடிப்பு என்று நாட்டையே நாசம் செய்ததவர்கள் யோக்கியர்கள் போல பேச கூச்சமில்லை ஏன்?...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
14-நவ-201910:42:47 IST Report Abuse
Chowkidar NandaIndiaஸ்ரீ ராமர் பிறந்த இடம் எதுவென்பதை ஹிந்துக்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். உங்கள் கடவுளை நீங்கள் தேடும் வழியை பாருங்கள். ஸ்ரீ ராமர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்கும் வரலாற்று சான்றுகள் ஏராளம். உங்களுக்கு தெரியாது, புரியாது என்பதால் அதெல்லாம் இல்லை என்றாகிவிடாது. கோத்ராவில் கரசேவர்கள் வந்த பெட்டியை வெளியிலிருந்து தாளிட்டு அப்பெட்டியை எரித்து அட்டூழியம் செய்த இஸ்லாமிய குண்டர்கள் ஆரம்பித்ததே கோத்ரா கலவரம்/குஜராத் கலவரம் என்பது. கோவை கலவரம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு, மும்பை ரயில்களில் குண்டுவெடிப்பு, மும்பையில் கஜாப் தலைமையில் வெறியாட்டம், காஷ்மீரில் கல்லெறிதல் முதல் பல வன்முறை சம்பவங்கள், அஹமதாபாத் குண்டுவெடிப்பு, ஹைதெராபாத் குண்டுவெடிப்பு, பெங்களூரில் குண்டுவெடிப்பு, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு இப்படி இஸ்லாமியர்களின் வன்முறை ஆட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாமே. எல்லாவற்றையும் செய்துவிட்டு, செய்துகொண்டே உத்தமர்கள் வேஷம் போட உங்கள் ஆட்களால் மட்டுமே முடியும். ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
15-நவ-201901:26:54 IST Report Abuse
ashak@Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா 1 . ராமர் பிறந்த இடத்தை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் அவர் மசூதிக்குள்ளே தான் பிறந்தார் என்று மசூதியை இடித்தால் அதற்க்கான ஆதாரத்தை தரவேண்டும், ஒற்ருக்கொரு நட்டுக்கொரு கடவுள் இல்லை, ஒன்றே குலம் ஒருவனே தேவன். 2 . ராமர் பிறக்கவில்லை என்று நான் எங்கேயும் சொல்லவில்லை, எனது கேள்வி இறைவனுக்கு எப்படி இறப்பு பிறப்பு இருக்கும் என்பது தான்? 3 . கோத்ராவை செய்தது பிஜேபி தான் என்று பிஜேபி யை சேர்ந்த பெண்ணே சொல்லிவிட்டார். 4 . காந்தியை கொன்றது போன்றே பல கலவரங்கள் நடந்துள்ளது அதை முன்னின்று நடத்தியது முஸ்லிம்கள் அல்ல, ஆனால் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து ஒன்றும் அறியாத குழந்தையை தீயில் இட்டு கருகிய பாதக செயலை மனித தன்மை உள்ளவன் செய்ய மாட்டான்....
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
12-நவ-201917:43:48 IST Report Abuse
Gopi தீவிர அகழ்வாராய்ச்சி செயல் கோவில் கட்ட கூடாது. அங்கு உள்ள பாபர் மசூதிக்கு முந்தைய கட்டிட அமைப்பின் நுணுக்கத்தை உலகிற்கு எடுத்து காட்டவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
12-நவ-201915:12:31 IST Report Abuse
Dr Kannan மனம் திருந்தி எல்லா மக்களிடமும் சாதி மத பேதமின்றி சகோதர தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X