அயோத்தி தீர்ப்பு:0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும்

Updated : நவ 13, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (32)
Advertisement
அயோத்தி, தீர்ப்பு, சுப்ரீம்கோர்ட், 0.3 ஏக்கர் நிலம், பாபர் மசூதி, 2.77 ஏக்கர், ராமர் கோவில்

புதுடில்லி : அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், 0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட, 2.77 ஏக்கர் நிலமும், மத்திய அரசுக்கு சொந்தமானது.


பதற்றம்


இந்த நிலத்தை, ராமர் கோவில் கட்ட வழங்க வேண்டும் என, தீர்ப்பளித்தது. இந்த வழக்கில், ஹிந்து அமைப்புகள் சார்பில், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் வாதாடினார். 92 வயதான அவருக்கு, இந்த வழக்கில், பெரும் உதவிகளை செய்தவர், வழக்கறிஞர் பி.வி.யோகேஸ்வரன். அயோத்தி தீர்ப்பு பற்றி, யோகேஸ்வரன் கூறியதாவது: அயோத்தியில், பாபர் மசூதி கட்டடத்துக்கு வெளியே, ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

மசூதியில், வெள்ளிக்கிழமை தோறும், முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர். மசூதி இருந்த இடத்தைத் தான், கடவுள் ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் கருதுகின்றனர். அதனால், 1949ம் ஆண்டு, டிச., 22ம் தேதி நள்ளிரவு, சிலர் ராமர் சிலையை, மசூதிக்குள் வைத்து விட்டு சென்று விட்டனர்.

இதனால், பதற்றம் ஏற்பட்டது; அயோத்தியில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் முடிவுப்படி, மசூதி இருந்த இடத்தை, அரசு கையகப்படுத்தியது.


சர்ச்சை


மசூதியில் இருந்து ராமர் சிலையை அகற்ற, அரசு எடுத்த முயற்சிக்கு, பைசாபாத் நீதிமன்றம் தடை விதித்தது; பூஜை தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த, 1986ல், மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டு, ராமரை வழிபட, பைசாபாத் நீதிமன்றம், ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கியது. இதன்பின் தான், அயோத்தி விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. கடந்த, 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன்பின், அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் உட்பட, 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.

இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் தான், அயோத்தி வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட, 2.77 ஏக்கரில், மசூதி இருந்த, 0.3 ஏக்கர் நிலம், அதாவது, 1,500 சதுர அடி நிலம் தொடர்பான வழக்கு மட்டுமே, பைசாபாத் நீதிமன்றத்தில் இருந்தது.

அதனால், உச்ச நீதிமன்றம், அதை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அந்த நிலத்தை, ராமர் கோவிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. மற்ற நிலப்பகுதிகள், ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதனால், கோவில் கட்ட தேவையான நிலத்தை வழங்குவது, மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இவ்வாறு, யோகேஸ்வரன் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201900:19:31 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ இன்னும் அனுமன் வால் போல போகும் போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-நவ-201916:58:38 IST Report Abuse
Endrum Indian 0.3 ஏக்கர் நிலம், அதாவது, 1,500 சதுர அடி நிலம்???13,068 சதுர அடி என்று இருக்கவேண்டுமே இது அச்சுப்பிழையா இல்லை As usual வக்கீல்கள்/அட்வக்கெட்களின் அளவுக்கு மீறிய மூளையா???
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
12-நவ-201920:31:21 IST Report Abuse
Rayஒரு ஏக்கர் என்பது 43 560 சதுர அடி 0.3 ஏக்கர் என்றால் 13 068 சதுர அடி...
Rate this:
Share this comment
Cancel
venugopalan k v - bangalore,இந்தியா
12-நவ-201915:28:34 IST Report Abuse
venugopalan k v திரு சுப்பையா அவர்களே கணக்கு தெரிந்து எழுதவும் 0.3 ஏக்கர் என்பது 13068 சதுர அடி. கணக்கு தெரிந்தவர்களை அணுகவும்
Rate this:
Share this comment
sudhanthiran. - chennai,இந்தியா
12-நவ-201916:50:57 IST Report Abuse
sudhanthiran.Round of 13000sqft என்று குறிப்பிட்டிருக்கிறார். 13068 புள்ளி 0.0001 inch என்றெல்லாம் எழுத இதென்ன maths exam மா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X