ஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை

Updated : நவ 13, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பாக்., எல்லை, காஷ்மீர், ஆயுதம், குவிப்பு, ராணுவம், ஆய்வறிக்கை, கண்காணிப்பு

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் ஆயுதங்களை, பாகிஸ்தான் தரப்பு குவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இந்தியா - பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி, பாக்., படையினர் திடீர் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அந்நாட்டு ராணுவ உதவியுடன், இந்திய பகுதிக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.


ஆய்வறிக்கை


இந்நிலையில், எல்லையில் நிலவும் தற்போதைய நிலை குறித்து, மத்திய அரசிடம், நம் ராணுவம், ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன் விபரம்: ஜம்மு - காஷ்மீர், எல்லையில், நுாற்றுக்கணக்கான பாக்., பயங்கரவாதிகள், இந்திய பகுதிக்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர். இவர்களின் ஊடுருவல் முயற்சிகள், கடந்த சில நாட்களாக, அதிகரித்துள்ளன. பாக்.,கின் எஸ்.எஸ்.ஜி., எனப்படும், சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும், 90 ஆயிரம் ராணுவ வீரர்களும், எல்லையில் குவிந்து உள்ளனர்.


கண்காணிப்பு பணி


அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீரில், ஒன்பது லட்சம் ராணுவ வீரர்களை, இந்திய தரப்பு குவித்துள்ளதாக, பாக்., கூறி வருகிறது. இந்தியா தரப்பில், 2.31 லட்சம் வீரர்கள், மட்டுமே, கண்காணிப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இரு பயங்கரவாதிகள் பலி


ஸ்ரீநகர் அருகே உள்ள, லாதாரா என்ற கிராமத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பந்திப்போரா மாவட்டத்தில், நேற்று காலை நடந்த சண்டையில், மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.


'மினி' பஸ் சேவை துவங்கியது


காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதியில், நேற்று முதல், 'மினி' பஸ்கள் இயங்க துவங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து, நேற்று முதல் துவங்கியது. மேலும், ஸ்ரீநகர் - பாராமுல்லா வழித்தடங்களில், இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதையடுத்து, நேற்று இரண்டு முறை, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கார்கள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்து, வழக்கம் போல இயங்க துவங்கின. ஸ்ரீநகரின் பல பகுதிகளில், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-நவ-201918:20:47 IST Report Abuse
r.sundaram பாகிஸ்தானுடன் போர் என்று வந்தால், பாகிஸ்தான் என்ற தேசம் உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் அது உலகத்துக்கே பெரிய ஒரு உதவியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
12-நவ-201914:40:49 IST Report Abuse
நக்கல் இந்தியாவின் குறி இனி காஷ்மீராக இருக்கக்கூடாது, இஸ்லாமாபாத்தாக இருக்கவேண்டும்... அப்போதான் அடங்குவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-நவ-201913:59:42 IST Report Abuse
Nallavan Nallavan சீனா தைரியம் கொடுத்திருக்கும் ...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X