எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

அயோத்தி தீர்ப்பு எதிரொலி; சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு

Updated : நவ 12, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
சபரிமலை , பக்தர்கள், அயோத்தி தீர்ப்பு, எதிரொலி, எதிர்பார்ப்பு, கேரளா, பெண்கள் அனுமதி, ஐயப்பன் கோவில், தரிசனம்

திருவனந்தபுரம் : 'அயோத்தியில் ராமர் பிறந்தார் என்ற, ஹிந்துக்களின் நம்பிக்கையில் சந்தேகம் இல்லை; அதில், நீதிமன்றம் தலையிடாது' என, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை விஷயத்திலும், அதே பார்வையில் தீர்ப்பளிக்குமா என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேரள மாநிலம், சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்பன், பிரம்மச்சாரி; அவரை, 10 முதல், 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தரிசிக்கக் கூடாது என்பது, அந்த கோவில் ஐதீகம்; ஹிந்துக்களின் நம்பிக்கையும் அதுவே. பிற இடங்களில் உள்ள அய்யப்பன் கோவில்களில், அனைத்து வயதினரும் தரிசிக்கலாம். ஆண்டாண்டு காலமாக, சபரிமலை கோவிலுக்கென்று மட்டுமே இருந்த இந்த நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 2018 செப்., 28ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும், சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, உத்தரவிட்டது.


மறுபரிசீலனை


கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வாதாடியதையும், உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த, கேரள அரசு தீவிரம் காட்டியது. அரசின் திட்டமிட்ட ஏற்பாட்டில், இளம் வயது பெண்கள் இருவர், கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் சில பெண்கள், கோவிலுக்கு வந்து, பக்தர்களின் எதிர்ப்பால், பாதி வழியில் திரும்பிச் சென்றனர். சபரிமலையிலும், செல்லும் வழியிலும், பெரும் போராட்டங்கள் நடந்தன. சட்டம்- - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கார்த்திகை மாதம், பக்தர்கள் நிம்மதியாக, சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

கேரள மார்க்சிஸ்ட் அரசு மீது இருந்த, பக்தர்களின் கோபத்தால், லோக்சபா தேர்தலில், அக்கட்சி கூட்டணி, படுதோல்வி அடைந்தது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, கோவில் வருமானமும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

'நாயர் சர்வீஸ் சொசைட்டி, பீப்பிள் பார் தர்மா' போன்ற பல அமைப்புகள், மனு தாக்கல் செய்திருக்கின்றன. அயோத்தி வழக்கில் வாதாடி, ராம் லல்லா தரப்பிற்கு வாதாடிய, மூத்த வழக்கறிஞர் பராசரன், வைத்தியநாதன் ஆகியோர் தான், பீப்பிள் பார் தர்மா அமைப்பிற்காகவும் வாதாடியுள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 17ல் ஓய்வு பெற உள்ளதால், சபரிமலை மறு சீராய்வு மனுவும், அதற்கு முன்பு பரிசீலிக்கப்பட உள்ளது. மறுசீராய்வு மனு என்பதால், வாதங்கள் ஏதும் இன்றி, அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கும்.

அயோத்தி வழக்கில், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு, நீதிபதிகள் மதிப்பளித்துள்ளனர். தீர்ப்பில், 'ராமபிரான், அயோத்தியில் தான் அவதரித்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில், எந்த சந்தேகமும் இல்லை. 'இதை, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை, உச்ச நீதிமன்றம் மதிக்கிறது' என, ஒருமித்த கருத்தில், நீதிபதிகள் கூறியுள்ளனர். அயோத்திக்கு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோரே, சபரிமலை வழக்கிலும் தீர்ப்பளிக்க உள்ளனர்.


பங்கம் ஏற்படும்


ஹிந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை. எனவே, ஹிந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை பரிசீலிக்குமா அல்லது பாலின சமத்துவம் என்ற அடிப்படையில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவே செல்லும் என அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அயோத்தி தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து, சபரிமலைக்கும் தீர்ப்பு கிடைக்கும் என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
12-நவ-201922:26:25 IST Report Abuse
PANDA PANDI கம்யூ கட்சி கூட்டணி, படுதோல்வி அடைந்தது. ஆனால் பி ஜே பி யும் படுதோல்வி அடைந்தது என்பதன் உண்மையையும் சொல்லி வைக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
12-நவ-201906:52:14 IST Report Abuse
Yezdi K Damo 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த ராஜகுமாரன்தான் மஹிஷி என்ற அரக்கியைய் கொல்ல வந்த கடவுள் என்று சொன்னால் எப்படி நம்ப முடியும் . இந்த அழகுல அந்த ராஜகுமாரனுக்கு வாவர் என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய நண்பரும் உண்டு . இதுக்கு பெண்கள் போகலாமா ,கூடாதான்னு குடுமிப்புடி சண்டை வேற .
Rate this:
Share this comment
Balasubramaniam - Panagudi,இந்தியா
12-நவ-201913:15:20 IST Report Abuse
Balasubramaniamமணிகண்டன் வாழ்ந்த்தது திரேதா யுகத்திற்கு முந்தய காலகட்டம். அய்யப்பன் வாழ்ந்தது 11 -ம் நூற்றாண்டு. இரண்டும் வேறு வேறு கால கட்டங்கள். மகிஷி கொல்லப்பட்டது மணிகண்டன் காலத்தில் வாபருடன் நட்பாக இருந்தது அய்யப்பன் காலத்தில்....
Rate this:
Share this comment
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
12-நவ-201906:15:27 IST Report Abuse
Dr.T.Senthilsigamani .அயோத்தி தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு.மிக நல்ல செய்தி .ஹிந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை.உண்மை முற்றிலும் உண்மை .பெண்ணுரிமைக்கும் சபரிமலை விவகாரத்துக்கும் சம்பந்தமே இல்லை .பெண்ணுரிமை பேசும் போலிமதச்சார்பின்மை வாதிகள் முத்தலாக் விஷயம் குறித்து /மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி குறித்து /சர்ச்சுகளில் பெண் பாதிரியார்கள் நியமனம் குறித்து வாய் திறக்கவே மாட்டார்கள் . பெண்ணுரிமை பேசி ஹிந்து மத கலாச்சாரங்களை கிண்டல்கள் /கேலிகள் /இளிவரல்கள் /பகடிகள் செய்பவர்களுக்கு சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்புக்கும் ,பெண்ணுரிமைக்கும் சம்பந்தம் இல்லை .அது தவறான வாதம் என்பதை சுருக்கமாக ஆம் சுருக்கமாக விளக்கிட தான் தான் இந்த பதிவு .கேரளாவிலும் ,தமிழகத்திலும் உள்ள 257 அய்யப்பன் கோவில்களில் 256 அய்யப்பன் கோவில்களில் எல்லா வித வயது பெண்களுக்கு அனுமதி உண்டு - ஒரே ஒரு பம்பை அய்யப்பன் கோவில் தவிர .அது போல இந்தியாவில் உள்ள 26,000 க்கும் மேற்பட்ட கோவில்களில் 5 கோவில்களில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி இல்லை. (மேலும் ஆண்களுக்கு அனுமதி இல்லாத 20,கோவில்களும் இந்தியாவில் உண்டு) .இதில் ஆணாதிக்கம் எங்கிருந்து வந்தது ? பெண் சம உரிமை எங்கு வந்தது ?சென்னையை சுற்றியுள்ள,மதுரையை சுற்றியுள்ள ,தஞ்சையை சுற்றியுள்ள எந்த கோவில்களிலாவது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா ? இதில் எங்கு ஆணாதிக்கம் வந்தது ?ஏனென்றால் பெண்ணியத்தை நிலைநாட்டும் இடம் சபரிமலை அல்ல.இதனை ஹிந்துக்கள் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் இதில் எங்கு தீண்டாமை வந்தது ?.முதலில் பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி இல்லை என்பது தொன்மையான மதமரபு 200 ஆண்டுகளுக்கு முன்பு ,கி பி 1816 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெஞ்சமின் ஸ்பைன் பர்டு மற்றும் பீட்டர் அயர் கார்னர் ஆகியோர் அந்த காலகட்டங்களில் திருவிதாங்கூர் - கொச்சி மாகாணங்களில் இந்திய பாரம்பரியம் /மதவழக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டனர் . அன்றைய இந்திய மக்களின் கலாச்சாரம் ,பாரம்பரியம் குறித்து அவர்கள் எழுதிய மெமரி ஆப் தி திருவாங்கூர் அண்ட் கொச்சி ஸ்டேட்ஸ் என்ற புத்தகத்தில் சபரிமலைக்கு அன்றைய காலகட்டத்திலே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் .ஆம் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு ,இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வருவதற்கு பல பல வருடங்களுக்கு முன்பே சபரிமலையில் பேணப்பட்டு வந்த தொல்மரபு இது. ஆயிரம் ஆண்டுகளாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது . . இது குறித்து,சமகால தலைசிறந்த தமிழ் அறிஞர் கூற்றில் சொன்னால் மாதவிடாயை தீட்டு என்பது வெறுமே 'அருவருப்பால் விலக்கும்' சடங்கு அல்ல. அது பிறப்பு இறப்பு தொடர்பான தொல்குடிகளின் புரிதல் சார்ந்தது. தொல்குடிகளின் வாழ்விலிருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட ஒரு தொன்மம்,, சடங்கு என்பதனாலேயே அதற்கு இருமுகம் உண்டு. ஒருபக்கம் தெய்வம் ஆணென்றிருக்கையில் அது விலக்கு. இன்னொருபக்கம் தெய்வம் அன்னை என்றிருக்கையில் அது புனிதமான பொலிதல். ஆகவே அதை ஒற்றைப்படையாகப் பார்ப்பது பிழை. ஐயப்பன் துறவியாக, நைஷ்டிக பிரம்மசாரியாக ,காம ஒறுப்பு நோன்பு கொண்டவராக (PERPETUAL BACHELOR) உருவகிக்கப்பட்டிருக்கிறார் என்பதனால்தான். அன்றும் இன்றும் துறவிகளுக்குரிய நோன்பு கொண்டவராக சபரிமலையில் மட்டுமே அய்யப்பன் தரிசனம் தருகிறார் .. .இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து கோவில்களில் ,ஹிந்து கடவுளர்கள் ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய் - சிவன் -பார்வதி ,விஷ்ணு - மஹாலக்ஷ்மி , தாயும் தந்தையுமாய் -குடும்பமாய் - சோமாஸ்கந்தர் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காண முடியும் .அத்தகைய கோவில்கள் தான் நடுத்தர ஹிந்து குடும்பங்களுக்கு தனது பெண்ணை மாப்பிளை வீட்டாரிடம் அறிமுகம் செய்யும் இடம் .மேலும் கடவுள் கணவன் மனைவியாக எழுந்தருளியுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ,வைகாசி ,ஆவணி ஆகிய மாதங்களில் வரும் சுப முகூர்த்த நாள்களில் ,ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பது உண்டு .ஆம் அத்தகைய கோவில்கள் 'திருவள்ளுவரின் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்னும் இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது ஆகும் .அங்கெல்லாம் பெண்களுக்கு அனுமதி எந்நாளும் உண்டு .ஆனால் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம். .இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது ? ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தை கையில் எடுத்து , இந்தியாவில் உள்ள எந்த கோவில்களிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உலகில் உள்ள கிருஸ்துவ, முஸ்லீம் நாடுகள் எண்ணும் அளவுக்கு ஊதி பெரிதாக்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர். பெண்களுக்கு மதத்தின் பெயரால் கல்வி , ஓட்டுரிமை மறுக்கப்படும் முஸ்லீம் நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் அடக்கு முறையில் வாழ்வதாகவும் உலகெங்கும் பரப்பி விட்டனர் என்பது தான் வேதனைக்குரிய செய்தி.மேலும் அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒற்றை கருத்தை வைத்து ,ஹிந்து கலாச்சாரங்களில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடையாது என முடிவுகள் கட்ட கூடாது. ஹிந்து மத சனாதன தர்மங்களில் பெண்களுக்கு சம நீதி /சம உரிமைகள் காலங்கள் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்களின் இதிகாசமாகிய மஹாபாரதத்தில் வரும் தேவயானி ,சத்யவதி ,குந்தி ,தமயந்தி மற்றும் திரௌபதி ஆகியோர் குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள் சாட்சியாக பேரரசியர்களாகி ஆட்சி பரிபாலனம் செய்ததே சான்று .அது மட்டும் அல்ல . ஜீவ நதிகளுக்கு காவேரி ,கங்கை ,கோதாவரி ,யமுனை என பெண்கள் பெயரை சூடியதும் ,இறைவனின் ஒரு பாதியாக இறைவி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர் தத்துவமும் அறிதலுக்கு மிக்க நன்றே. மேலும் ஹிந்து மதத்தை போன்று வேறு எந்தமதத்திலாவது ஹிந்து மதம் அளவு பெண்தெய்வங்கள் உண்டா ? - வீரத்திற்கு தெய்வமென பார்வதி செல்வத்துக்கு தெய்வமென ,மஹாலக்ஷ்மி ,கல்விக்கு சரஸ்வதி ,பத்திரகாளி ,முத்தாலம்மன் ,முத்தாரம்மன் ,மதுரை மீனாட்சி ,காஞ்சி காமாட்சி,ஸ்ரீஆண்டாள் ,மாரியம்மன் ,காளியம்மன் ,வராகி அம்மன் ,ஆதிபராசக்தி என வரிசைகள் நீளும் . ஆம் மற்ற மதத்தில் எத்தனை பெண்தெய்வங்கள் உள்ளன ?இதெயெல்லாம் கருத்தில் கொண்டு சபரிமலை விஷயத்தில் பெண்ணுரிமை பேசுவோர் தங்களின் நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவும்.
Rate this:
Share this comment
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-நவ-201914:16:54 IST Report Abuse
Ramesh RChristian churches never stop women from entering or worshipping . Christianity women priests are not allowed but to a certain level women are allowed to share the liturgy they can read bible from the orbit / main altar, girls are allowed to be ministers while mass is going on etc.,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X