பொது செய்தி

இந்தியா

மாணவியரை கவர்ந்த தலைமுடி தானம்

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement

கொச்சி: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கேரளாவைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, தன் தலைமுடியை தானமாக அளித்தார்.


இதனால் ஈர்க்கப்பட்டுள்ள கல்லுாரி மாணவியர், தங்களுடைய தலைமுடியை தானமாக அளிக்க முன்வந்து உள்ளனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பெண் போலீஸ் அதிகாரியான அபர்ணா லவகுமார், 44, தன் தலைமுடியை தானமாக அளித்தார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, 'விக்' தயாரிப்பதற்காக, அவர் கடந்த மாதம் தன் தலைமுடியை தானமாக அளித்தார். இது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி, அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவருடைய செய்கையால் ஈர்க்கப்பட்டு, கல்லுாரி மாணவியர் பலரும் தங்களுடைய முடியை தானமாக வழங்க முன்வந்து உள்ளனர்.இது குறித்து, அபர்ணா லவகுமார் கூறியதாவது:ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை பார்த்தபோது, மிகவும் வேதனையடைந்தேன். இவர்களுக்கு உதவ, என்னிடம் போதிய பண வசதி இல்லை. அப்போது தான், முடியை தானமாக அளிக்க முடிவு செய்தேன். இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல.என்னுடைய நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட மாணவியர் பலரும், தங்களுடைய தலைமுடியை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னைப் போலவே, முடியை தானமாக அளிக்கும் முடிவை மாற்றிக் கொள்ளும்படி அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேவையில், நான் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன். இதுபோல, அவரவருக்கு ஏற்ற முறையில் உதவிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
17-நவ-201906:37:29 IST Report Abuse
atara கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. so medicine for Cancer is by eating the human hair?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-நவ-201914:57:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni என் பேத்தி யு எஸ் லே இருக்கா வயது 18 இதுவரை பலமுறை தானம் செய்துருக்கா அவளுக்கு மிகவும் அடர்த்தியானகூந்தல் முதுகு கீழ்வரை வளர்த்துண்டு பாப் ஹேர் போல தானம் செய துடுவா . இதுவரை ஐந்து தரம் தந்துருக்கா
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
12-நவ-201914:00:02 IST Report Abuse
THINAKAREN KARAMANI லட்சரூபாய் கொடுத்தாலும் ஈடாகாத தானம் இது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மேல் நீங்கள் கொண்ட அன்பு எவ்வளவு பெரியது என்பது உங்களின் அபூர்வமான இந்த தானத்தின் மூலம் தெரிகிறது. உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X