சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: சமீபத்தில் நடந்த கட்சியின் ஆய்வுக்கூட்டத்தில், சர்வாதிகாரியாக மாறுவேன் என்றேன். அது, வெறும் பேச்சுக்காக அல்ல. நாளடைவில், நிச்சயம், சர்வாதிகாரியாக மாறுவேன். அது, என் தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்ல; கட்சி வளர்ச்சிக்காக. எனவே, தவறு செய்வோர் திருந்திக் கொள்ளுங்கள்.

'டவுட்' தனபாலு: 'கட்சியில் ஜனநாயகம் குறைந்து விட்டது; கோஷ்டி பூசல் அதிகரித்து விட்டது; கட்சிக்காக பாடுபட்டோர், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என, நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் பலர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். அவர்களை அடக்கத் தான், சர்வாதிகாரியாக மாறுவேன் என, மிரட்டுகிறீர்களோ என்பதே, என், 'டவுட்!'

அ.ம.மு.க., அதிருப்தியாளர் புகழேந்தி: பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போன்ற, அ.ம.மு.க.,வில் இரண்டாண்டுகளாக இருந்து விட்டேன். அந்த கட்சியில், உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. தினகரனை நம்பி சென்றவர்கள், தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் உள்ளோர், ஆபாச படம் எடுப்போர்.

'டவுட்' தனபாலு: தினகரனை இந்த அளவுக்கு வசை பாடியது, நீங்கள் ஒருத்தர் தான்; வேறுயாரும் இந்த அளவுக்கு அவரை சாடியிருக்க மாட்டார்கள். இதை பார்க்கும் போது, இரண்டு ஆண்டுகளாக, அவரால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பீர்கள் போல இருக்கிறது. அந்த கட்சியில் இருப்போர் ஆபாச படம் எடுப்போர் என்கிறீர்களே... 'அந்த' படங்களில் நீங்களும் நடித்துள்ளீர்களோ... 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர மாட்டோம். மாநகராட்சிகளில் எங்கள் கட்சி வலுவாக உள்ளது என்பதால், எங்கள் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,விடம் பேசி, மேயர் பதவிகள் கேட்போம். அவ்வாறு கேட்பது எங்கள் உரிமை. பரிசீலிப்பதும், வழங்குவதும், மறுப்பதும் அவர்கள் முடிவு.

'டவுட்' தனபாலு: நேற்று வரை, தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும், கடுமையாக வசை பாடியுள்ள உங்களை, அவர்கள் எப்படி சேர்ப்பர்... அதனால் தான், நீங்களே முந்திக் கொண்டு, 'தி.மு.க., கூட்டணியில் சேர மாட்டோம்' என்கிறீர்களா... அதென்ன, மாநகராட்சிகளில் உங்கள் கட்சி வலுவாக உள்ளதா; அப்படியானால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., எல்லாம் வலுவிழந்து உள்ளதா... 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-201908:16:50 IST Report Abuse
Kalyanaraman ஆக, ரமணி அக்காவை சகுனி படத்தில் கார்த்தி மேயர் ஆக்குவதைபோல் ராதிகாவை மேயராக்க சரத்குமார் சகுனியாகிறார். ஆனா அது தன் தலையில் தானே நெருப்பு வைப்பதற்கு சமம் என்பது எடப்பாடிக்கு தெரியும். சரத்குமார் சரக்கு விலை போகாது
Rate this:
Share this comment
Cancel
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
12-நவ-201909:00:44 IST Report Abuse
Natarajan Attianna குடும்பத்தை காப்பாற்ற சர்வாதிகாரி தேவை கட்சியும் குடும்பமும் ஓன்று தானே கட்சி தான் குடும்ப சொத்து அதிலிருந்துதான் பல கோடி சொத்துக்களை உள் நாடு அயல் நாட்டிலும் வாங்கி குவித்தித்தீர்கள் கட்சியை காப்பாற்றுவதும் குடும்பத்தை காப்பாற்றுவதும் ஓன்று தான் என்பது மக்களுக்கு புரியும்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-நவ-201906:07:53 IST Report Abuse
D.Ambujavalli சரத்குமாரின் கட்சியை பூதக்கண்ணாடி கொண்டு தேடிப் பார்க்க வேண்டிய நிலையில், மாநகராட்சிக்கும், மேயருக்கும் ஆசையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X