மஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல்

Updated : நவ 12, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
மஹா., ஆட்சி, பவாருக்கு அழைப்பு, ஆதித்யா தாக்கரே, கவர்னர், மாறியது காட்சி, கூட்டணி, முறிவு

மும்பை : மஹாராஷ்டிரா அரசியலில் தேர்தல் முடிவு வெளியாகி சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் நாடகம் இன்று (நவ.,12) முடிவுக்கு வந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்ததை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து, 6 மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது. இதனை எதிர்த்து சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. 105 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 146 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அதை விட கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்றதால் எளிதாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அந்த கூட்டணிக்கு கிடைத்தது. ஆனால் 'முதல்வர் பதவியை சுழற்சி முறையில் எங்களுக்கு வழங்க வேண்டும். அமைச்சரவையில் 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும்' என சிவசேனா தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதனால் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடித்தது.

அதிருப்தி அடைந்த பா.ஜ. தலைவர்கள் மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று முன்தினம் சந்தித்தனர். 'ஆட்சி அமைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை' என அவரிடம் தெரிவித்தனர். அடுத்ததாக சட்டசபை தேர்தலில் பா.ஜ. வுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைந்ததால் நேற்று மாலை 7:30க்குள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை கொடுக்கும்படி சிவசேனாவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கெடு விதித்தார்.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் முழுவீச்சில் இறங்கினர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய தேசியவாத காங்கிரஸ் 'பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற வேண்டும். மத்திய அமைச்சரவையிலிருந்தும் வெளியேற வேண்டும்' என திடீர் நிபந்தனை விதித்தது.


முடிந்தது உறவு!


இதைத் தொடர்ந்து மத்திய அரசில் கனரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்வதாக டில்லியில் நேற்று காலை அறிவித்தார். இதையடுத்து 30 ஆண்டுகளாக நீடித்து வந்த பா.ஜ. - சிவசேனா உறவு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கு பின் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறத் துவங்கின. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங். தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார்.

டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மஹாராஷ்டிரா மாநில காங். தலைவர்களுடன் சோனியா நேற்று காலையில் ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் தொலைபேசியில் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.


ஆதித்யாவுக்கு 'பல்பு!'


இதையடுத்து சிவசேனா கட்சியின் சட்டசபை தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். சந்திப்பு முடிந்த பின் ஆதித்ய தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சி அமைப்பது குறித்த எங்கள் விருப்பத்தை தெரிவிக்க மாலை 7:30 வரை கவர்னர் அவகாசம் அளித்திருந்தார். அந்த நேரத்துக்கு முன்பாகவே கவர்னரை சந்தித்தோம். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங். கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர முன் வந்துள்ளதாக கவர்னரிடம் தெரிவித்தோம்.

இரண்டு கட்சிகளுடனும் விரிவான பேச்சு நடத்த வேண்டியுள்ளதால் மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் தரும்படி கவர்னரிடம் கேட்டோம். அவர் மறுத்து விட்டார். ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


விளக்கம்


இது குறித்து கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ..க்களின் ஆதரவு கடிதங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் கவர்னரிடம் சிவசேனா கட்சியினர் அளிக்கவில்லை. கூடுதலாக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் கவர்னர் அவகாசம் தர மறுத்து விட்டார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. பின் நேற்று இரவு மஹாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட நிகழ்வுகள் அரங்கேறின.

நொடிக்கு நொடி காட்சிகள் மாறின. பா.ஜ., சிவசேனாவுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் அதாவது 54 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரசுக்கு ஆட்சி அமைப்பது தொடர்பான விருப்பத்தை தெரிவிக்கும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து தேசியவாத காங். கட்சியின் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டோர் நேற்று இரவு கவர்னரை சந்தித்தனர். அப்போது ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று இரவு 8:30க்குள் முடிவை தெரிவிக்கும்படி தேசியவாத காங். தலைவர்களுக்கு கவர்னர் கெடு விதித்தார். தேசியவாத காங். மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில் ''கூட்டணி கட்சியான காங்கிரசுடன் பேச்சு நடத்தி எங்கள் முடிவை கவர்னரிடம் இன்று இரவு8:30க்குள் தெரிவிப்போம்'' என்றார்.

இந்நிலையில், கவர்னர் பகத்சிங் கேஷ்யாரி, மாநிலத்தில் சட்டப்படி ஆட்சி அமைக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தார். இதனையடுத்து, டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கவர்னரின் பரிந்துரையை ஏற்று, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


சிவசேனா வழக்கு


கவர்னரின் , முடிவுக்கு எதிராக சிவசேனா சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது சட்ட விரோதம். அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கால அவகாசம் வழங்கவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியை வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளது.


ஜனாதிபதி ஆட்சி அமல்

இந்நிலையில், யாரும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், அடுத்த 6 மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201922:43:33 IST Report Abuse
padma rajan அப்படியே தொடரட்டும் அரசியல்வாதிகளின் தொல்லையிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
Rate this:
Cancel
AYYA - Chennai,இந்தியா
12-நவ-201919:53:41 IST Report Abuse
AYYA தயவு செய்து வேலை மற்றும் படிப்பில் இட ஒதிக்கீட்டை ஒரு தலைமுறைக்கு மட்டும் கொடுக்கவும். தொடர்ந்து அனுபவித்தவர்களே அனுபவிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் ஒருமுறை பயன் பெற்றவர் குடும்பம் "முன்னேறிய குடும்பம்தான்". இப்படி அவர்களே தொடர்ந்து அனுபவிப்பதால், (அதே இனத்தை சேர்ந்தவர்கள் கூட) மற்றவர்கள் அனுபவிக்க முடியாது போகிறது. இதை அவசர வழக்க எடுத்து ரஞ்சன் கோகாய் அவர்கள் சிறந்த தீர்ப்படி உடனே கொடுக்க வேண்டும். என்னுடன் படித்த நண்பன் இட ஒதுக்கீட்டில் படித்தது, நல்ல வேலை பெற்று, பதவி உயர்வு பெற்று லட்ச கணக்கில் சம்பாதிக்கிறான். இப்போது இதே அவன் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. கூடிய வரைவில் அவனது மகனும் அரசு வேலைக்கு இட ஒதுக்கீட்டில் வர உள்ளன. ஆனால், நான் தனியார் வேலையில் சேர்ந்து, இன்றும் வேலை தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201900:05:05 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை // இட ஒதுக்கீட்டில் ஒருமுறை பயன் பெற்றவர் குடும்பம் "முன்னேறிய குடும்பம்தான்". //...
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
12-நவ-201918:43:05 IST Report Abuse
Palanisamy Sekar உத்தவ் படிக்கிற பள்ளியில் அமீத்ஷாதான் பிரின்ஸ்பல்..அது இப்போதாவது புரிந்திருக்கும் சிவசேனைக்கு. சும்மா அங்க இங்க ஓடோடி சந்திப்பது..தொலைபேசியில் பேசுவது..இப்படிப்பட்ட டகால்டி வேலைக்கெல்லாம் பா ஜ க ஒன்றும் பயந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார் உத்தவ். மகனை முன்னிறுத்தி முதல்வராக பார்க்க ஆசைப்பட்டார்..இப்போ உள்ளதும் போச்சுடா ன்னு மூலையில் ஒடுக்கப்பட்டார். காங்கிரசின் காலில் வீழ்ந்தும் அவர்கள் இவரை ச்சீ போ என்று தள்ளிவிட்டு சென்றுவிட்டார்கள். காத்திருக்க சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். பா ஜ க வுக்கு என்று ஏதும் இழப்பில்லை.. ஆக பெரிய கட்சி இப்போதும் இனி எப்போது அந்த கட்சி மட்டும்தான்..வழிக்கு வரவைப்போம் சிவசேனையை..இல்லையென்றால்..பொறுத்திருந்து பாருங்கள்..
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201900:02:53 IST Report Abuse
தமிழ்வேல் அமீத்ஷாவை 15 நாட்களா எங்கேயாவது பார்த்தீங்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X