சோனியா,ராகுல் பாதுகாப்பில் மாற்றம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சோனியா,ராகுல் பாதுகாப்பில் மாற்றம்

புதுடில்லி : காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும், முன்னாள் தலைவருமான ராகுல், மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோருக்கான பாதுகாப்புப் பணியை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்றுக்கொண்டுள்ளது.

காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருடைய மனைவி சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர்.வி.வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு குறித்து, மத்திய உள்துறை அவ்வப்போது ஆய்வு செய்கிறது. அதன்படி, சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், இசட் பிளஸ் பிரிவின் கீழ், சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு, கடந்த, 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியை, நேற்று ஏற்றுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Bangalore,இந்தியா
12-நவ-201914:43:28 IST Report Abuse
Ganesan யாருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதோ அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை... மோடி மற்றும் கும்பலுக்கு நிச்சயம் பாதுகாப்பு தேவைதான், ஏனென்றால், மக்கள் படுபயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள் இவர்கள் மீது...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-நவ-201912:00:19 IST Report Abuse
Lion Drsekar முதலில் மக்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்படு செய்யுங்கள், பொது மக்களுக்கு இடையூறு செய்பவர்களை முக்கிய பிறகுறைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் எப்படி சுட்டு தள்ளுவார்களோ அதே போன்று மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க சட்டத்தில் மாற்றங்கள் செய்து காவல்துறைக்கு சுதந்திரம் கொடுங்கள், இங்கு மக்களும் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
12-நவ-201911:22:48 IST Report Abuse
மணி அன்பான ராஜீவை கொன்று நாட்டை சீர்குலைத்தார்கள், அதற்குமுன் அன்னை இந்திரா. நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களான ராகுல் பிரியங்கா இவர்களின் பாதுகாப்பில் மெத்தனம் காட்டிவிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X