புதுடில்லி: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இரு நாள் அரசு பயணமாக வரும் நாளை (13-ம் தேதி) இந்தியா வருகிறார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பருவநிலை மாற்றம், நிலைத்த சந்தை, மற்றும் பொருளாதாரம் ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் . நவ. 14-ம்தேதி, இளவரசர் சார்லசுக்கு 71-வது பிறந்தநாள் ஆகும். அதை இந்தியாவிலேயே கொண்டாடுகிறார். சார்லஸ் இந்தியா வருவது 10-வது முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
