மதுரையில் 9 ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்க ரூ.40 லட்சம் கற்றல் திறனை மேம்படுத்த புதுவசதி| Dinamalar

தமிழ்நாடு

மதுரையில் 9 ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்க ரூ.40 லட்சம் கற்றல் திறனை மேம்படுத்த புதுவசதி

Added : நவ 12, 2019
Share
மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த 9 ஸ்மார்ட் பள்ளிகளை உருவாக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் 26 துவக்கப்பள்ளி, 14 நடுநிலை, 9 உயர்நிலை, 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 17 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஏற்கனவே 5 ஸ்மார்ட் பள்ளிகள் உள்ளன. தற்போது தேசிய நகர்ப்புற ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலும் 9 ஸ்மார்ட்
மதுரையில் 9 ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்க ரூ.40 லட்சம் கற்றல் திறனை மேம்படுத்த புதுவசதி

மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த 9 ஸ்மார்ட் பள்ளிகளை உருவாக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் 26 துவக்கப்பள்ளி, 14 நடுநிலை, 9 உயர்நிலை, 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 17 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஏற்கனவே 5 ஸ்மார்ட் பள்ளிகள் உள்ளன. தற்போது தேசிய நகர்ப்புற ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலும் 9 ஸ்மார்ட் பள்ளிகளை உருவாக்க ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.10.8 லட்சம், முனிச்சாலை உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம், வெள்ளி வீதியார் பெண்கள், சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளிக்கு தலா ரூ.3.7 லட்சம் உட்பட 9 பள்ளிகளுக்கு நிதி கிடைத்துள்ளது. ஸ்மார்ட் பள்ளிகளுக்கான உபகரணங்கள் விரைவில் வாங்கப்பட உள்ளன.
மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஸ்மார்ட் பள்ளிகளுக்கு இணைய தள வசதி வழங்கப்படும். வழக்கமான வகுப்பு எடுக்கும் நடைமுறையுடன், புரொஜக்டர் மூலமும் பாடம் நடத்தப்படும். ஏற்கனவே ஆசிரியர் அளித்த விளக்கத்தை, வீடியோ மற்றும் படங்கள் மூலம் காட்டுவதால் மாணவர்களால் எளிதில் பாடத்தை புரிந்துகொள்ள முடியும். மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X