தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

Added : நவ 12, 2019
Share
Advertisement
மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன. சில மனுக்களின் விபரம்:மதுரை ஊமச்சிகுளம் ஆதிதிராவிடர் காலனியில் 150 அருந்ததியினர் குடும்பம் உள்ளது. இதில் 8 நபர்களை போலீசார் திருட்டு வழக்கில் பிடித்துச் சென்று துன்புறுத்துவதாகவும், இன்ஸ்பெக்டர், மூன்று பெண் எஸ்.ஐ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.*

மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன. சில மனுக்களின் விபரம்:மதுரை ஊமச்சிகுளம் ஆதிதிராவிடர் காலனியில் 150 அருந்ததியினர் குடும்பம் உள்ளது. இதில் 8 நபர்களை போலீசார் திருட்டு வழக்கில் பிடித்துச் சென்று துன்புறுத்துவதாகவும், இன்ஸ்பெக்டர், மூன்று பெண் எஸ்.ஐ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.* உசிலம்பட்டி திருவள்ளுவர் நகர் பாண்டியம்மாள் அளித்த மனுவில், ''பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்க ஊராட்சி ஒன்றியத்தில் மனு அளித்தேன். எனக்கு சொந்தமான சில பகுதியை சிலர் ஆக்கிரமித்ததால் மீதமுள்ள பகுதியில் வீடு கட்டிக் கொடுக்க அதிகாரிகளுக்கு ரூ.ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தேன்' என தெரிவித்தார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இவர் போராட்டம் நடத்தியதால் போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இச்சம்பவம் நடந்த போது கலெக்டர் அங்கு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X