'பறக்கப்போவது' யாரு... பகல் கனவுல பல பேரு!

Added : நவ 12, 2019
Share
Advertisement
 'பறக்கப்போவது' யாரு... பகல் கனவுல பல பேரு!

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அங்கிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.''அக்கா, கோவில் படிக்கட்டுகளை பார்த்தீங்களா,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''ஒரு ஓரத்துல வெள்ளித்தகடு காணாம போயிருந்துச்சு; அதைத்தானே கேக்குறே...''''அடடே... எவ்ளோ கரெக்டா சொல்றீங்க. அதுவா, பிய்ஞ்சு விழுந்துச்சா, யாராவது பிய்ச்சிட்டு போனாங்களான்னு தெரியலை. இப்போதைக்கு சீரமைச்சிருக்காங்க,''செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை கடந்து வந்தபோது, ''செல்வபுரம் சாலையை நாலு வழிச்சாலையா மாத்தப் போறாங்களாம். ரோட்டோர ஓட்டு வீடுகளை காலி செய்ய, ஹைவேஸ்காரங்க 'கெடு' விதிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''கெடு விதிக்கிறது இருக்கட்டும். உக்கடம் பாலம் வேலை நடக்குறதுனால, அந்த வழியா போறவங்க எவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கிறாங்க. 'பேட்ச் ஒர்க்' செய்வாங்கன்னு பார்த்தா, மழை விடட்டும்னு சொல்றாங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''அதிகாரிங்க, எப்பவுமே, குளுகுளு கார்ல போறதுனால, அவுங்களுக்கு மக்கள்படுற கஷ்டம் தெரியலை போலிருக்கு,''''அக்கா, பிளான் போட்ட மாதிரி, நைட் நேரத்துல, அந்த அதிகாரியை துாக்கிட்டாங்க, பார்த்தீங்களா,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''மித்து, தீயணைப்பு துறை அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறைக்காரங்க, 'துாக்குன' சமாச்சாரத்தை சொல்றியா, அவரை, தீபாவளி நேரத்துலயே துாக்கணும்னு 'ஸ்கெட்ச்' போட்டாங்க; அப்ப, தப்பிச்சிட்டாரு. இப்ப, மாட்டிக்கிட்டார்''.உக்கடம் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் ஸ்டேஷனை கடந்து சென்றதும், ''நம்மூர்ல மழை பெய்யுதோ, இல்லையோ, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல கரன்சி மழை கொட்டுதாமே,'' என, நோண்டினாள் மித்ரா.''அதுவா, அனைத்து மகளிர் கிழக்கு பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பொண்ணு போயி, செலவுக்கு கணவர் பணம் கொடுக்க மாட்டேங்கிறாரு; நகையை கொடுக்க மாட்டேங்கிறாருன்னு புகார் கொடுத்திருக்கு. கணவரை விசாரணைக்கு அழைச்சிருக்காங்க. ரெண்டு பேரையும் ஒக்கார வச்சு பேசியிருக்காங்க''''திரும்பி போகும்போது, கணவரை மட்டும் கூப்பிட்டு, ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்துட்டு போன்னு சொல்லியிருக்காங்க. அவ்ளோ பணம் இல்லை; ஆயிரம் தான் இருக்குன்னு சொல்லிருக்காரு. பரவாயில்லை; கொடுத்துட்டு போன்னு, பறிச்சிட்டு அனுப்பியிருக்காங்க. வெளியே வந்த கணவர், மனைவி கேட்டபோதே, பணத்தை கொடுத்திருக்கலாம்னு புலம்பிட்டு போயிருக்காரு''''அச்சச்சோ... ஊரெல்லாம் வழிப்பறியா இருக்குன்னு, ஸ்டேஷன்ல சொல்லப்போனா, அங்க, பிக்பாக்கெட் அடிச்ச கதையா இருக்கே,''''ஆமா மித்து, மற்ற பிரிவை காட்டிலும் மகளிர் போலீசுலதான் கட்டப்பஞ்சாயத்து அமோகமா நடக்குது,'' என்றாள் சித்ரா.டவுன்ஹால், மணிக்கூண்டு பகுதியை ஸ்கூட்டர் கடந்ததும், ''என்னக்கா, இந்த வருஷமாவது உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்களா,'' என, சீண்டினாள் மித்ரா.''என்ன, அப்படி கேட்டுட்ட. ஆளுங்கட்சிக்காரங்க ஜரூரா வேலை பார்க்குறாங்க. விருப்ப மனு வாங்குறதுக்கு நிர்வாகிங்க பெயர் பட்டியல் வெளியிட்டு இருக்காங்களே. 'மாஜி' அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, கிணத்துக்கடவு தாமோதரன், பொங்கலுார் தாமோதரனுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க,''''ஆமா, நானும் அந்த பட்டியலை பார்த்தேன். எந்த ரூபத்திலும் அதிகார எல்லைக்குள் நுழையக் கூடாதுன்னு, பொறுப்பு கொடுக்கிற மாதிரி கொடுத்து, பக்கத்து மாவட்டங்களுக்கு தள்ளி விட்டுருக்காங்க,''''ஓ... இவ்ளோ விஷயம் இருக்கா... இந்த வருஷம், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்தாம, கவுன்சிலர் மூலமா தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்றாங்களாம்,''''அப்படியா,'' என, வாயை பிளந்தாள் மித்ரா.''மேயர் நேரடி தேர்தல் நடத்துறதா இருந்தா, 100 வார்டுக்கும் பிரசாரத்துக்கு போறதுக்கு அவகாசம் கொடுக்கணும். கவுன்சிலர் தேர்தல் மட்டும் நடத்துனா, ஒரு வார்டுக்குள்ள போறதுக்கு தேவையான அவகாசம் கொடுத்தா போதும்னு நெனைக்கிறாங்க,''''மேயர் கனவுல ஏகப்பட்ட பேரு சுத்திக்கிட்டு இருப்பாங்களே, ஏதாச்சும் தகவல் தெரிஞ்சதா,''''ஆளுங்கட்சி தரப்புல, வடவள்ளிக்காரம்மா, மேயர் கனவுல வலம் வர்றாங்க. அவுங்களதான் முன்னிறுத்துவாங்கன்னு பேசிக்கிறாங்க. தி.மு.க., தரப்புல, 'மாஜி' கவுன்சிலர், காய் நகர்த்திட்டு இருக்காங்க. லாட்டரி கிங் மனைவியும் 'மூவ்' பண்றாங்களாம். காங்., கட்சியில, 'மாஜி' மகளும் முயற்சி செய்றாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி, வீதி வீதியா போய், வலை விரிச்சு, நாய் பிடிச்சிருக்காங்க,''என்றாள் சித்ரா.''இன்னொண்ணு தெரியுமா...குளத்துல மீன் பிடிக்கிறதுக்கு யாருக்குமே உரிமம் கொடுக்கலை. இருந்தாலும் எல்லா குளத்திலும் பிடிக்கிறாங்க. மீன் பெயரை அடைமொழியா வச்சிருக்கிற தி.மு.க., புள்ளி, குளக்கரையில் கடை போட்டு, அமோகமா கரன்சி எண்ணுறாரு.''இந்த குளத்தை, பல்லுயிர் பெருக்கு மண்டலமா கார்ப்பரேஷன் அறிவிச்சு என்ன பிரயோஜனம்? அமைச்சர் வந்தார்; கலெக்டர் வந்தார்; கமிஷனர் வந்தார்; துணை கமிஷனர் வந்தாருன்னு பட்டியலை அடுக்கிட்டே போகலாம். ஒருத்தரால கூட, மீன் பிடிக்கிறதை தடுக்க முடியலையே...'''''அந்தளவுக்கு 'பவர் புல்' அரசியல்வாதியா அந்த ஆளு?,''''கை நீட்டி, கரன்சி வாங்குனா, தலையை குனிஞ்சிட்டு தானே வரணும்,''''ஆமாக்கா, முத்தண்ணன் குளத்திலும் மீன் பிடிச்சு, கரையிலேயே விக்கிறாங்க...ஹைவேஸ் அதிகாரிகளும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க; கார்ப்பரேஷன் ஹெல்த் டிபார்ட்மென்ட் காரங்க எட்டிக்கூட பார்க்கிறதில்ல. மக்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க. சீக்கிரமே, கடையில இருக்கிற மொத்த மீன் கழிவுகளையும் அப்படியே சாக்குல அள்ளிட்டு போயி, கார்ப்பரேஷன் கமிஷனர் ஆபீஸ் வாசல்ல கொட்டப்போறதா கொந்தளிக்கிறாங்க...''கலெக்டர் அலுவலகத்தை ஸ்கூட்டர் கடந்து, செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது, ''அரசு அதிகாரியை அடிச்சுட்டாங்களாமே,'' என, கிளறினாள் மித்ரா.''அதுவா, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில செயலரா இருக்கிறவரு செந்தில்குமார். 'ரூபி நகர்ங்கிற பகுதியில, ரோட்டுல ஜல்லி, மணல் கொட்டி, கட்டட வேலை செய்றாங்க; நடவடிக்கை எடுங்க'ன்னு ஆளுங்கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க. 'ஏரியாவை சேர்ந்த மக்களிடம் கையெழுத்து வாங்கி, மனுவா கொடுங்க; நடவடிக்கை எடுக்கிறேன்'னு பதில் சொல்லியிருக்காரு.''சம்பவம் நடந்த அன்னைக்கு ஏகப்பட்ட தடவை, செயலர் மொபைல் போனுக்கு கூப்பிட்டு இருக்காங்க; அவர், எடுக்கலை; ஆளுங்கட்சி பிரமுகர் தலைமையில, வீட்டுக்குள்ள இரவு நேரத்தில் புகுந்த கும்பல், அதிகாரியை அடிச்சு, உதைச்சிருக்காங்க. போலீசில் புகார் கொடுத்தும், ரெண்டு நாளைக்கு பிறகே, எப்.ஐ.ஆர்., பதிவு செஞ்சிருக்காங்க,'''உச்' கொட்டிய மித்ரா, ''இதேமாதிரி, முகாம் நடத்த போன, அதிகாரிகளிடம் தகராறு செஞ்சாங்களாமே...'' என, கேட்டாள்.''ஆமாப்பா, ஆனைகட்டி பகுதியில, பழங்குடி மக்கள் அதிகமா வசிக்குறாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி, அதிகாரிங்க சிறப்பு முகாம் நடத்தியிருக்காங்க. உள்ளூர் அ.திமு.க.,வினர் திரண்டு வந்திருக்காங்க.''எங்க எம்.எல்.ஏ., ஆறுக்குட்டிகிட்ட சொல்லாம எப்படி முகாம் நடத்தலாம்னு தகராறு பண்ணி, விண்ணப்பங்களை பிடுங்கிட்டுப் போயிட்டாங்களாம். முகாமுக்கு வந்திருந்த பழங்குடி மக்களையும் விரட்டி விட்டுட்டாங்க. அதிகாரிங்க, என்ன பண்றதுன்னு தெரியாம திரும்பி வந்துட்டாங்க,''ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, பேக்கரிக்குள் இருவரும் நுழைந்தனர்.சுக்கு காபி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''வட்டார போக்குவரத்து ஆபீசுக்குள்ள, லைசென்ஸ் வாங்க வர்றவங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி விதிச்சிருக்காங்க. உறவினரா இருந்தாலும், கேட்டுக்கு வெளியே நிக்கணும்னு ஆர்டர் போட்டிருக்காங்க. ஆனா, புரோக்கர்கள் 'அசால்டா' உள்ளே போறாங்க. புரோக்கர்களை ஒழிக்கிறதுக்கே, 'ஆன்லைன்' நடைமுறை கொண்டு வந்திருக்காங்க. அவுங்க ராஜ்ஜியமே கொடி கட்டி பறக்குது,'' என்றாள்.காபி சாப்பிட்டு விட்டு, இருவரும் வீட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X