அசையாத ஆபீசர்; 'மசியாத' போலீசார்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | |
Advertisement
மழையில் நனைந்ததால், உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சித்ராவை பார்க்க சென்றாள் மித்ரா.''அட... லேசா 'பீவர்'தான் ஒண்ணுமில்லை. நாளைக்கு ரெடியாயிடுவேன். நீ வராட்டி என்ன?'' என்ற சித்ரா, கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.''அதில்லைங்க்கா... போனில் உங்க குரலை கேட்டதுமே தெரிஞ்சுகிட்டேன். அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்,'' மித்ரா சொன்னதும்,
 அசையாத ஆபீசர்; 'மசியாத' போலீசார்

மழையில் நனைந்ததால், உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சித்ராவை பார்க்க சென்றாள் மித்ரா.''அட... லேசா 'பீவர்'தான் ஒண்ணுமில்லை. நாளைக்கு ரெடியாயிடுவேன். நீ வராட்டி என்ன?'' என்ற சித்ரா, கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.''அதில்லைங்க்கா... போனில் உங்க குரலை கேட்டதுமே தெரிஞ்சுகிட்டேன். அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்,'' மித்ரா சொன்னதும், சித்ராவின் அம்மா இருவருக்கும் வெஜிடபுள் சூப் கொண்டு வந்தார்.'வாம்மா... மித்ரா நல்லாயிருக்கியா? சரி.. சரி... ரெண்டு பேரும் சூப் குடிச்சுட்டே பேசுங்க,'' என்றவாறு சமைய லறைக்குள் சென்றார். இருவரும் சூப் பருகியவாறே பேசினர்.''ஏன்... மித்து. உள்ளாட்சி தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு?''''இப்பதான் சூடு பிடிக்குது. ஆனா, பதவி ஒதுக்கீடு விவரம் தெரியவே இல்லை. எம்.எல்.ஏ., ஆபீசுல விவரம் இருக்கறதால, ஆளும்கட்சிக்காரங்க மட்டும் கண்டுபிடிச்சுட்டாங்க,''''சரிடி... மத்தவங்க எப்படி தெரிஞ்சுக்குவாங்க?''''அதான்க்கா... யாரு கூப்பிட்டாலும், அந்த அதிகாரி போனை அட்டெண்ட் பண்றதே இல்லையாம். இதுக்குன்னு இல்லை, எதுக்கு கூப்பிட்டாலும், அட்டெண்ட் பண்ண மாட்டாங்களாம். இந்த மாதிரி ஒரு அதிகாரியை பார்த்ததேயில்லைன்னு, கிளார்க், ஸ்டாப் எல்லாம் பேசிக்கறாங்களாம்,''''இப்ப சரி.. தேர்தல் அறிவிச்சாங்க... இவங்ககிட்ட எப்படி வேலை பார்க்கறது? அதனால, அவரை மாத்தினாதான் நல்லதுன்னு, சில ஸ்டாப் வெளிப்படையாவே சொல்றாங்களாம்,''''கரெக்ட்தாண்டி, மக்களுக்கு சேவை செய்றதுக்கு இருக்கிற அதிகாரிகள், தங்களோட சேவையை மட்டுமே பார்த்துக்கிறாங்க. இந்த மாதிரி அதிகாரிகளை எல்லாம், அந்த மதுரை 'மீனாட்சி'தான் காப்பாத்தணும்,'' என்ற சித்ரா, ''மித்து, 'அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, ஓ.பி.எஸ்., டென்ஷன் ஆகிட்டாராம்,'' கேள்வி கேட்டாள்.''அப்படி என்னக்கா, அவருக்கு டென்ஷன்?''''அரசு வேலை வாங்கி கொடுக்கறதா, ஆனந்தமான 'மாஜி'பணம் வசூல் செஞ்சாருன்னு, சென்னைக்ேக போயி, ஓ.பி.எஸ்., கிட்ட புகார் வாசிச்சிருக்காங்க. ஆனா, அவரு அதைய கண்டுக்கலையாம். இதென்னடா, வம்பா போச்சுன்னு, ஓடிப்போய் 'பொக்கே' வாங்கிட்டு வந்து, 'அமெரிக்கா பயணம் சிறப்பா அமையனுங்கண்ணா'னு சொல்லி, ஒரு செல்பியும் எடுத்துட்டு வந்துட்டாங்களாம்'' என கூறி சிரித்தாள் சித்ரா.''அக்கா... இன்னொரு உள்ளாட்சி மேட்டர் இருக்குது?''''என்னடி அது?'''' கார்ப்ரேஷனிலுள்ள உதவி கமிஷனர்களை 'டிரான்ஸ்பர்' செய்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவங்க இன்னும் பழைய இடங்களிலேயே வேலை பார்க்கறாங்களாம். எலக்ஷன் நேரத்தில், இப்படி செஞ்சா, புதுசா வர்றவங்களுக்கு என்ன தெரியும்? மறுபடியும் உத்தரவு வந்தா, பார்த்துக்கலாம்னு, அதிகாரி சொல்லிட்டாராம்,'' என, விளக்கினாள் சித்ரா.அப்போது அறைக்குள் வந்த சித்ராவின் அம்மா, 'சித்து, பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த 'காஸ்ட்லி' பைக்கை யாரோ திருடிட்டு போயிட்டாங்களாம். நீங்க பேசிட்டிருங்க, நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்,' என்றவாறே வெளியே சென்றார்.''அக்கா... சிட்டியிலடூ வீலர் காணாம போறது அதிகமாயிடுச்சு,''''உண்மைதான்டி. இப்படித்தான், குமரன் ரோடு, குறுக்கு சந்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த புதிய பைக் பட்டப்பகலில் திருடப்பட்டது. அதை ரெண்டு பேரு திருடி, ஓட்டிட்டு போற 'சிசிடிவி' பதிவுகளை, ைபக் உரிமையாளரே தேடிப்பிடிச்சு, போலீசுக்கு கொடுத்தும், இதுவரை கண்டுபிடிக்கலையாம்,''''நீங்க சொன்னதும், லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஞாபகத்துக்கு வருதுங்க்கா. அங்கேயும், இப்படித்தான், நடுராத்திரி, டூ வீலர் திருட ஒருத்தன், ஒரு வீட்டுக்குள்ள பூந்துட்டான். உடனே, ஆட்கள் வரவே, தான் ஓட்டிட்டு வந்த டூ வீலரை அப்படியே போட்டுட்டு 'எஸ்கேப்' ஆயிட்டானாம்,''''அதிர்ச்சியடைந்த மக்கள்,'சிசிடிவி' புட்டேஜ் கொண்டு போய் ஸ்டேஷனில் கொடுத்து, கம்ப்ளைன்ட் செஞ்சிருக்காங்க. ஆனா, போலீஸ்காரங்க அதை வாங்கி வச்சிட்டு, இதுவரைக்கும் ஒண்ணும் பண்ணலையாங்க்கா,''''போலீஸ்காரங்க, இப்படி அசால்ட்டா இருந்தா, திருடன்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த சப்-டிவிஷனில், திருட்டு, வழிப்பறி நடக்காத நாளே இல்லைன்னு, எல்லாருமே சொல்றாங்க. இவ்வளவு நடந்தும் அந்த 'சாமி' அதிகாரி, எதையுமே கண்டுக்கறதில்லையாம்,''''அவர விட்டுத்தள்ளுடி மித்து. உயரதிகாரிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஒரு ஸ்டெப்பும் எடுக்கறதில்லை. அங்க மட்டுமல்ல, ரூரலில் புல்லா, திருட்டு நடந்துட்டேதான் இருக்கு. எப்ப மக்களுக்கு கோபம் வந்து பொங்க போறாங்கன்னு தெரியலே,'' என்ற சித்ரா, ''மித்து, ரூரலில் பிரைவேட் ஸ்கூலில், பிளஸ் 2 ஸ்டூடண்ட்ஸ் 'சரக்கு'அடிச்சிட்டுத்தான், கிளாஸ்க்கு போறாங்களாம், தெரியுமா?''''இதென்னக்கா கொடுமையா இருக்குது?''''காளைக்கு பேர் போன ஊருக்கு பக்கத்தில இருக்கிற, 'முத்தான ஊரில்'தான் இந்த பிரச்னை. பள்ளி நிர்வாகமும் அஜாக்கிரதையா இருந்துட்டாங்க. 'நல்லா படிக்கற ஒரு பையனுக்கு, கூட படிக்கிற பசங்களே, குடி'யை வாங்கி கொடுத்து இருக்காங்க''''இதனால, போதைக்கு அடிமையாகி, ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகிற அளவுக்கு பிரச்னை முத்திடுச்சாம்,''''இதை தெரிஞ்சவுடன்தான், பள்ளி நிர்வாகம், ஸ்டிரிட்டா நடவடிக்கை எடுத்துட்டு இருக்காங்களாம்,''''இப்படி இருந்தா, பசங்க எப்படி மித்து படிப்பாங்க. அதே ஊர் மேட்டர் இன்னொன்னு இருக்கு?''''சொல்லுங்க்கா...''''டிஸ்டிரிக்ட்டில், எல்லா யூனியன் ஆபீஸரையும் டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்க. ஆனா, இந்த ஊரில் இருக்கற அதிகாரி, என்னை யாராலும் அசைக்க முடியாதுங்கற கணக்கா, ஒட்டிட்டு இருக்காராம்,''''அவருக்கு மட்டும் என்ன சலுகைன்னு விசாரிச்சதில், சங்கத்தில் மாநில பொறுப்பில் இருக்கிற நபர் என்பதால்தான் இப்படின்னு, கூட இருக்கிற ஆபீஸர்ஸ் பேசிக்கிறாங்க,''''அக்கா... சிட்டிக்கு புதுசா வந்த அதிகாரியை பார்த்து, போலீஸ்காரங்க வெடவெடத்து போயிருக்காங்க'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''யாருடி அந்த அதிகாரி,''''சென்னையில் இருந்து வந்தவர்தான். யாரிடமும் சொல்லாமல் திடீரென, ஸ்டேஷன்களுக்கு 'சர்ப்ரைஸ் விசிட்' அடிச்சிட்டு, ஒழுங்கா வேலை பார்க்கலைன்னா, 'மெமோ' கொடுத்துருவேன்' என, எச்சரிக்கை செஞ்சாராம்,''''அடடே... பரவாயில்லையே. போன வாரம்தான், 'மோகன'அதிகாரியோட செயல்பாடுகளை பாராட்டினோம். இப்ப வந்திருக்கிற அதிகாரியும் 'ஸ்டிரிட்டு'ன்னு, கிரைம் ரேட் குறைய ஒரு வாய்ப்பா இருக்குமே,''''அக்கா, கரெக்ட்தான். அதே மாதிரி, இந்த விவகாரத்தையும் சீரியஸா விசாரிச்சா தேவலை''''எந்த விவகாரம்டி''''பாத்திர பட்டறை' ஸ்டேஷன் லிமிட்டில், போலி பிராண்ட் பனியன்களை தயாரிச்ச, மூனு பேர் கைதானாங்க. அதுல, ஆர்டர் கொடுத்தது ஒரு நைஜீரியன் காரராம். அவர்கிட்ட எந்த ரெக்கார்டு இல்லாம, தங்கியிருக்காராம். போலீசார் முழுமையாக விசாரிச்சா, உண்மை வெளியே வரும்,'' என்றாள் மித்ரா.''ஏன்... மித்து, 'சபா' பங்கேற்ற விழாவில், 'பேண்ட் வாத்திய குழு பசங்க' வெயிலில், ரெண்டு மணி நேரம் நின்னு துவண்டு போயிட்டாங்களாம்,''''இது எங்கே நடந்ததுங்க?''''லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்தில நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதுக்காக, தனியார் பள்ளி மாணவர் 'பேண்ட் வாத்திய' குழுவினர், இரண்டு மணி நேரம் வெயிலில் நிக்க வச்சுட்டாங்க. இதனால, பல பசங்க மயங்கி விழற அளவுக்கு போயிட்டாங்க. இதைப்பார்த்த அதிகாரி ஒருத்தர், தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தினாராம்,''''இந்த அரசியல்வாதிங்க என்னைக்குத்தான் திருந்துவாங்களோ,'' சலித்து கொண்ட மித்ரா, ''அக்கா... அதே ஊரில், ரோட்டோரம் ஏகப்பட்ட தள்ளுவண்டி கடைகள் வச்சிருக்காங்க. அதனை, ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு விட்டு, சம்பாதிக்கிறாங்களாம். நெடுஞ்சாலை ரோட்டையே ஆக்கிரமித்து, காசு பார்க்கும் சாமார்த்தியசாலிகளை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனராம்,'' என்றாள்.''சரி... மித்து. டாக்டர் கிட்ட என்னை கூட்டிட்டு போயிட்டு, நீ அப்படியே வீட்டுக்கு கெளம்பிடு,'' என்றவாறு எழுந்தாள் சித்ரா.''ஓ.கே.,ங்க்கா,'' என, மித்ரா பின் தொடர்ந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X