சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 கிலோ கஞ்சா பறிமுதல்: திருப்பூர் அருகே நால்வர் கைது

Added : நவ 12, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரை அடுத்த மூலனுாரில் கஞ்சா விற்ற, நால்வரை போலீசார் கைது செய்து, மூன்று கிலோவை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, மூலக்கடை என்ற இடத்தில் சந்தேகப்படும் விதமாக, நான்கு வாலிபர்கள் நின்றிருந்தனர். போலீசாரை கண்டதும், ஓட முயன்றனர். இதனால், இவர்களை பிடித்து, விசாரித்தனர். அதில், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அரவிந்த், 19, சுபாஷ், 19, பழநி, கணக்கம்பட்டியை சேர்ந்த தீபக், 19 மற்றும் சிவசுப்ரமணியம், 28 என்பது தெரிந்தது. இவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை சிலரிடம் வாங்கி, மூலனுாருக்கு விற்க வந்தது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 3 கிலோ பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.இவர்களுக்கு கொடுத்தது யார், எங்கிருந்துகொண்டு வந்தார்கள் என, பின்னணி குறித்து மூலனுார் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X