பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிப்பால் நிரம்பும் பெரிய மதகுக்குட்டம் ஊரணி

Added : நவ 12, 2019
Advertisement

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்தக்குளம்,அருகே உள்ள பெரிய மதகுக்குட்டம் ஊரணியும் மழைநீர் சேகரிப்பால் நிறைந்து வருகிறது.கடந்த 2003ல் திருப்புல்லாணி சக்கர தீர்த்தக்குளத்தின்நான்குபுறங்களிலும் பெரிய பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டு மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.கடலுக்குள் வீணாக செல்லும் பொன்னங்கழிக்கானல் நீரோடையில் சேகரமாகும் நீரைஇரு பெரிய பைப்புகள் மூலம் உறிஞ்சி கிணற்றில் விடப்படுகிறது. 2015ல் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்னங்கழிக்கானல் நீரோடை துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன.பருவ மழைகாலங்களில் பொன்னங்கழிக்கானல் நீரோடையின் உபரி வெள்ள நீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு, கடந்தாண்டு அமைக்கப்பட்ட 800 மீ., சிமென்ட் கால்வாய் மூலம்பெரிய மதகுக்குட்டம் ஊரணி முழுவதும் நிரம்பியுள்ளது.குறிப்பிட்ட உயரத்திற்கு பின் தானாகவே,பெருமாள் கோயில் சக்கரதீர்த்த தெப்பக்குளத்திற்கு செல்லும் வகையில் வாய்க்கால் அமைந்துள்ளது.உள்ளூர் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள்,திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்துஇப்பணியை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X