பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பியது மீனாட்சியம்மன் கண்மாய்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 12, 2019
Advertisement
 நிரம்பியது மீனாட்சியம்மன் கண்மாய்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

போடி:மழை காரணமாக போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் நீர்நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, பத்திரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராம கிணறுகளில் தண்ணீர் பெருகுவதோடு, 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.கேரளா மற்றும் குரங்கணி, கொட்டகுடி பகுதியில் காரணமாக கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் முழுவதும் நிரம்பி, மதகுகள் வழியாக வேறு கண்மாய்க்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் தண்ணீர் தேங்கும் காலங்களில் படகு சவாரி விட பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X