தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ஓயாத மின் தடையால் மக்கள் அவதி

Added : நவ 12, 2019
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பகுதி மட்டுமின்றி, பாரதி நகர், ஓம்சக்தி நகர், பட்டணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஓயாத மின் தடையால் மக்கள் அவதிப்படகின்றனர். பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆமை வேகத்தில் பல மணி நேரம் கழித்தே பழுது சீரமைக்கின்றனர்.

ராமநாதபுரம் நகர் பகுதியில் நேற்று பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் வீடுகளில் மக்கள் தவித்தனர். இதேபோல் பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி நகர் வடக்கு பகுதி, மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்படுகிறது. சில வேளை பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் தடைக்கான காரணத்தையும் கூறுவது இல்லை. மின் தடை குறித்து புகார் செய்தால் முறையான பதில் அளிப்பது இல்லை.

ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை அருகே சவேரியார்பட்டிணத்தில் அடிக்கடி மின் தடை செய்கின்றனர். இரவு முழுவதும் மின் தடை ஏற்படுவதால் கொசுக்கடியால் மக்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் உதவி மின் பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், சம்பந்தப்பட்ட பகுதி லைன் மேனிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. மின்மாற்றி பழுதானதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது, என்கின்றனர்.

கொசுக்கடியால்பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என அப்பகுதி மக்கள் கலெக்டர் வீரராகவ ராவிடம் தெரிவித்தனர்.இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் மின் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் பல மணி நேரம் நிறுத்தம் செய்யப்படுவதால், அனைத்து தொழில்களும், கல்வி கற்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் எதுவும் நடப்பதில்லை. மின் வாரிய அதிகாரிகள் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுது ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X