பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம்

Added : நவ 12, 2019
Advertisement

பரமக்குடி : -பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் வித்யா கணபதி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.நவ., 9 காலை 7:00 மணிக்கு அனுக்ஞையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடாகின. காலை 6:30 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர்.தொடர்ந்து ஸ்ரீவித்யா கணபதிக்கு பல்வேறு அபிேஷகம் நடத்தப்பட்டு, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.சவுராஷ்ட்ரா கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கோவிந்தன், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X