பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன

Added : நவ 12, 2019
Advertisement

தேனி:தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி காயமடைந்து பாதிக்கப்பட்ட சிறுமியுடன் தாய் டி.ஆர்.ஓ. கந்தசாமியிடம் மனு அளித்தார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:தேனி நகராட்சி சோலைமலை அய்யனார் கோயில் தெரு பகுதியில் நேற்று முன்தினம் தெருநாய் 13 பேரை கடித்து காயப்படுத்தியது. இதில் அனுஸ்ரீ 3, சிறுமியின் முகத்தில் கோரமாக கடித்தது. தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இவரது தாயார் வழங்கிய மனுவில் தேனி நகராட்சி பகுதியில் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி டி.ஆர்.ஓ.விடம் வலியுறுத்தினார்.* பெரியகுளம், தென்கரை பேரூராட்சியை சேர்ந்த முருகவேல் வழங்கிய மனு: தென்கரை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் 8 வார்டுகள் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். இங்கு இருமுறை ஆதிதிராவிடர் பெண்கள் பேரூராட்சி தலைவர்களாக இருந்துள்ளனர். இருமுறை பொது ஆண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியினை எஸ்.சி. ஆண்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்றார்.* சின்னமனுார் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மனு: புலிகுத்தி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு ஆதிதிராவிடர்களுக்கு இதுவரை வார்டுகள் ஒதுக்க வில்லை. இதனால் இவர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது. இங்குள்ள 9 வது வார்டில் 92 தலித் வாக்காளர்கள் உள்ளனர். எனவே 9 வது வார்டை ஆதிதிராவிடர் வார்டாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என கோரினார்.* தேனி 29வது வார்டை சேர்ந்த நிவாஷ் தலைமையில் இளைஞர்கள் வழங்கிய மனு: தேனி நகராட்சி சுப்பன்தெரு, ராகவன் காலனியில் 500 குடும்பங்கள் உள்ளன. இங்கு 4 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை கட்டி இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இப் பகுதிக்கான ரேஷன் கடை ஒன்றரை கி.மீ., தொலைவில் வார சந்தை பகுதியில் செயல்படுகிறது. முதியோர்,பெண்கள் சென்று வர இயலவில்லை. அத்தியாவசிய பொருட்கள் பெற முடியவில்லை. கழிவுநீர் முறையாக அகற்றாததால் சுகாதார கேடு கொசு தொல்லை ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்' என கோரினர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X