பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் ஆசிரியர் கலந்தாய்வு துவக்கம்

Added : நவ 12, 2019
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் ஆசிரியர் ஆன்லைன் கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தேவி தலைமை வகித்தார். காலை வருவாய் மாவட்ட அளவில் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் மாறுதலில் தங்கம்மாள்புரம்அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தேன் மொழி, மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றார். குமணன் தொழு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணிராஜா, தேவராம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றார். தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருப்பையா, அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றார்.மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கான கலந்தாய்வில் 4 பேர் மாறுதலாகி சென்றனர்.தேனி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடங்களில் 10 காலியாக உள்ளது. மாநில முன்னுரிமை என்பதால் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் இப் பணியிடத்தை தேர்வு செய்யலாம். மதியம் முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை)ராஜா, (உயர்நிலை) வளர்மதி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X