சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் சிக்கிய இளம்பெண்: ஆளுங்கட்சி கொடி காரணமா?

Added : நவ 12, 2019
Share
Advertisement
கோவை : லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட இருவர் காயமடைந்தனர்; ரோட்டின் ஓரத்தில் இருந்த கட்சி கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில்
 லாரியில் சிக்கிய இளம்பெண்: ஆளுங்கட்சி கொடி காரணமா?

கோவை : லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட இருவர் காயமடைந்தனர்; ரோட்டின் ஓரத்தில் இருந்த கட்சி கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில் கம்பம் வைத்து வருகின்றனர். நேற்று(நவ.,11) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவை வந்தார்.கோவையில் இருந்து கார் மூலம் சேலம் சென்றார். முதல்வரை வரவேற்க அ.தி.மு.க., கட்சியினர் சிட்ரா பகுதியில் இருந்து இரு புறங்களிலும் ரோட்டின் ஓரத்தில் கட்சி கொடிகளை இரும்பு கம்பிகளில் கட்டி நட்ட வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி, 22 மற்றும் பைக்கில் சென்ற நித்யானந்தம் ஆகியோர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நித்யானந்தமும் காயமடைந்தார்.காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையிலும், ஆண் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இச்சூழலில் ரோட்டில் வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சென்று விசாரித்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்தகவலால் குறிப்பிட்ட பகுதியில் வைத்திருந்த கொடி கம்பங்களை மட்டும் கட்சியினர் அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X