அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (88)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: அதிமுகவை நடத்திய ஜெ., பாணியில் திமுகவையும் நடத்த ஸ்டாலின் எடுத்த முயற்சிக்கு இதுவரை பலன் கிட்டவில்லை என உடன் பிறப்புகள் கவலை தெரிவிக்கின்றனர்.






சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் பங்கேற்ற தென்மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


கைகட்டி, வணங்கி , பவ்யம்


அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதா அக்கட்சியில் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். அவர் கை காட்டும் நபர்களே அமைச்சர், எம்எல்ஏ., என வலம் வந்தனர். பிடிக்கவில்லை என்றால் ஏற்கனவே உச்சத்தில் இருந்தவர்களை தூக்கி எறிந்து விடுவார். எந்த உச்சத்தில் இருந்தாலும் அவர்கள் பூஜ்யம் ஆகி விடுவர். இதற்கு பயந்தே ஜெயலலிதா முன்பு அதிமுகவின் அனைத்து நிர்வாகிகளும் கைகட்டி, வாய் பொத்தி, குனிந்து, வணங்கி பவ்யம் காட்டினர். இவர்களை ஜெயலலிதா அலட்சியமாக பார்த்து செல்வது பழக்கம். இதுதான் அவரது ஸ்டைல்.






நிர்பந்தித்தார்


கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆன பின் கட்சி கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்த ஸ்டாலின். கட்சியின் மூத்த தலைவர்களையும், மாவட்ட செயலர்களையும் கட்டுப்படுத்த ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டார். அக்கட்சியின் மாஜி அமைச்சர்கள் பலரும் கருணாநிதியுடன் சிறுவயது முதல் இருந்தவர்கள். ஸ்டாலினை இவர்கள் கட்டுப்படுத்த பார்த்தார்கள்.
குறிப்பாக ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டிஆர் பாலு, பொன்முடி, ஏ.வ.வேலு, போன்றவர்கள் தங்கள் மாவட்டங்களில் குட்டி ராஜாக்களைப் போல் வலம் வந்தனர். இவர்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் ஜெ., பாணி தான் சரி என்று முடிவு எடுத்த ஸ்டாலின், தான் சொன்னதையும், நினைத்ததையும் கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்தார். தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு ஸ்டாலின் இஷ்டப்படியே நடந்தது.


திமுக தோல்வி


மூத்த தலைவர்கள் சொன்னவர்களுக்கு சீட் தரப்படவில்லை. இது கட்சிக்குள் அதிருப்தியை கிளப்பியது. கட்சிக்கு தொடர்ந்து தோல்வி ஏற்பட்டதால், மீண்டும் மூத்த தலைவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தார் ஸ்டாலின். பொன்முடி, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்றவர்களின் வாரிசுகளுக்கு சீட் தர வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இது கட்சிக்காக காலம்காலமாக உழைத்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அப்படி இருந்தும் கடந்த நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது. நவ.10 ல் நடந்த பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின்; கட்சியில் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும். கோஷ்டிகள் கட்சியின் நலனுக்காக மாற வேண்டும். இல்லாவிட்டால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று பேசினார்.
இவர் ஏற்கனவே சர்வாதிகாரியாக இருந்து பார்த்தும், கட்சியில் வித்தியாசத்தை கொண்டு வர முடியாததால் மீண்டும் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறும் நிலைக்கு வந்துள்ளார் ஸ்டாலின். ஜெயலலிதாவின் பாணியில் கட்சியை நடத்த மீண்டும் முயற்சிக்கிறார் . இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
14-நவ-201909:42:55 IST Report Abuse
வால்டர் அப்பா பெயரை வைத்தே ஓட்ட பார்க்கிறான். இதுல உதயை வேறு உள்ளே இழுத்து விட்டாச்சு. கலைஞரில் 5% கூட வரமாட்டான் இவன். இவன்ல 5% கூட அவன் வரமாட்டான். இப்படி தலைவர்களை வச்சு, வச்சிரவேண்டியதுதான் அடமானம்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
13-நவ-201913:27:07 IST Report Abuse
Jayvee jevin kaal தூசு கூட பெறமாட்டார் எங்க அண்ணா .. சாரி அண்ணன்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-நவ-201911:37:56 IST Report Abuse
இந்தியன் kumar எங்களுக்கு சர்வாதிகாரியும் வேண்டாம் அடிமை ராஜாக்களும் வேண்டும் நல்ல மக்கள் சேவகர் தான் வேண்டும் வரும் தேர்தல் அதை முடிவு செய்யும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X