யூடியூப் லைக் மோகம்: பேயாக நடித்த மாணவர்கள் கைது

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (37)
Advertisement
யூ டியூப் லைக், பேய், மாணவர்கள், கைது,

பெங்களூரு: தாங்கள் நடத்தும் யூ டியூப் சேனலில் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பேய் வேடமிட்டு பொது மக்களை மிரட்டிய 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரை சேர்ந்த மாணவர்கள் சிலர் 'கூக்ளி பீடியா' என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். புதுமையாக எதையாவது செய்து பார்வையாளர்களை அதிகரிக்க முடிவு செய்தனர். இதற்காக திட்டமிட்ட அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பேய் வேடமிட்டு பொது மக்களை மிரட்டும் யூ டியூப் சேனல் பிரபலமாக இருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. அதை பின்பற்ற முடிவு செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.,10) இரவு பெங்களூரு யஷ்வந்த்புரம் அருகே ஷெரீப் நகர் பகுதியில் நள்ளிரவில் களத்தில் இறங்கினர். வெள்ளை உடை அணிந்து, அதில் ரத்தக்கறை போல் மை வைத்துக் கொண்டு ஒருவர், அந்த வழியாக வந்த பொது மக்கள் முன்பு திடீரென்று தோன்றி பயமுறுத்தினார். பொதுமக்கள் பீதியில் ஓடினர். பேய் வேடமிட்டவரை ஒருவர் உருட்டுக் கட்டையால் துரத்தினார். அதை மறைவாக நின்று மற்றவர்கள் வீடியோ எடுத்தனர்.

பீதி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்களில் சிலர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தனர். பேய் வேடமிட்டிருந்தவர் அவர்களையும் விரட்டினார். ஆனால், போலீசார், மாணவர்களை பிடித்தனர். மறைவாக வீடியோ எடுத்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து யூ டியூப்புக்காக இப்படி செய்கிறோம் என்றனர்.

தொடர்ந்து அவர்களை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களின் பெயர் ஜான் மாலிக்(20), நவீத்(20), சஜில் முகமது(21), ஷாகிப்(20), சையத் நபீல்(20), யூசுப் அகமது(20), முகமது அயுப்(20) என்பதும், அவர்கள் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது. முன் அனுமதியின்றி இந்த செயலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-201902:35:19 IST Report Abuse
Babu ஃபிராங்க் வீடியோக்களை பப்ளிக் நியூ சென்ஸ் செக்ஷனில் சேர்க்க வேண்டும். இந்த அரைகுறை சுய நல முட்டாள்கள் செய்யும் சில பிராங்க் வீடியோக்களினால்(யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க) மக்களின் ஆபத்தில் உதவும் குணங்களும், காக்கும் எண்ணமும் பாதிக்கப்படலாம்.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-நவ-201922:34:30 IST Report Abuse
Rafi பேய், பிசாசு இறந்தவர்களுக்கு சக்தி இருக்கு போன்றவை இஸ்லாத்தில் கிடையாது, துரதிஸ்டவசம்மாக இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே, அவர்களின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். பலகீனமானவர்கள் இதில் பாதிப்படைவார்கள் என்ற அறிவு கூட இவர்களின் சிந்தனைக்கு வரவில்லை. உலக ஆர்வமே இதில் மேலோங்கி இருக்கு. இது போன்ற நிகழ்வுகள் பல வலை தளத்தில் அதிகம் காணலாம். இஸ்லாமியர்கள் என்பதாலேயே சற்று வசைகள் கூடியிருக்கு. வசை பாட வாய்ப்பு தேடுபவர்களுக்கு அதன் நோக்கம் எதற்காக செய்தார்கள் என்று சிந்திக்கவா செய்வார்கள்? நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் பல இருக்கு அவற்றை இஸ்லாமியர்கள் மதம் கொண்டு பார்ப்பது இல்லை, தவறு செய்தவர்களை அவர்கள் சார்ந்த மதத்தோடு இணைத்து இங்கு பதிவிட்டு இருக்கின்றார்களா? என்றால் அதற்கான வாய்ப்பில்லை. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பயம் என்பது தான் நினைவுக்கு வருகின்றது.
Rate this:
Share this comment
வால்டர் - Chennai,இந்தியா
14-நவ-201909:51:08 IST Report Abuse
வால்டர்"இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே" - ஒத்துக்கிட்டான்யா. இதுக்கு சவூதி அரேபியால என்ன தண்டனை? நிறைவேத்திரலாமா? " வசை பாட வாய்ப்பு தேடுபவர்களுக்கு அதன் நோக்கம் எதற்காக செய்தார்கள் என்று சிந்திக்கவா செய்வார்கள்?" - நீ மோடியை மதத்தோடு கண்ணை மூடிக்கொண்டு சேர்த்து எழுதும்போது அடுத்தவர்களுக்கு எப்படி இருக்கும்? மோடி செய்தி வந்தாலே கண்டமேனிக்கு கிறுக்க வேண்டியது. "பேய், பிசாசு இறந்தவர்களுக்கு சக்தி இருக்கு போன்றவை இஸ்லாத்தில் கிடையாது, பலகீனமானவர்கள் இதில் பாதிப்படைவார்கள் என்ற அறிவு கூட இவர்களின் சிந்தனைக்கு வரவில்லை." - முத்தலாக்கு சட்டம் கொண்டு வந்ததே இந்த மாதிரிஆள்களுக்காகத்தான். புரியுதா?...
Rate this:
Share this comment
வால்டர் - Chennai,இந்தியா
14-நவ-201909:54:14 IST Report Abuse
வால்டர்"பேய், பிசாசு இறந்தவர்களுக்கு சக்தி இருக்கு போன்றவை இஸ்லாத்தில் கிடையாது, துரதிஸ்டவசம்மாக இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே, அவர்களின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். பலகீனமானவர்கள் இதில் பாதிப்படைவார்கள் என்ற அறிவு கூட இவர்களின் சிந்தனைக்கு வரவில்லை." - இந்த மாதிரி அறிவிலிகளுக்காகத்தான் முத்தலாக் சட்டம் கொண்டு வந்ததே. அதென்ன நாங்க வசை பாடுகிறோம். மோடி செய்தி வந்தால் தெரியும் வசை பாடுவது யாரென்று....
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
14-நவ-201913:41:04 IST Report Abuse
Rafi சம்மந்தமே இல்லாமல் முத்தலாக் எங்கிருந்து வந்தது இதில். முத்தலாக்கை எதிர்த்து பெண்கள்மட்டுமே கலந்தது கொண்ட மிக பிரமாண்ட பேரணியை பார்க்கவில்லையா? அப்போ எந்த பெண்களின் பாதுகாப்பிற்காக அந்த சட்டம். ஆதரித்தது சிலர் எதிர்த்தது பல்லாயிரம் பெண்கள்....
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
12-நவ-201921:22:47 IST Report Abuse
jagan நம்ம ஊர் போலீசா இருந்தால் இவனுக, பாத்ரூமில் வழுக்கி விழுவானுக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X