அரசியல் செய்தி

தமிழ்நாடு

மஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (120+ 80)
Advertisement
Maharashtra, govt, மஹா., ஜனாதிபதி, ஆட்சி, சிவசேனா

மும்பை: மஹாராஷ்டிராவில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


கவர்னர் கெடு


மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில், பா.ஜ., சிவசேனா இடயே இழுபறி ஏற்பட்டது. சிவசேனா நிபந்தனைகள் காரணமாக, ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த பா.ஜ., தலைவர்கள் 'ஆட்சி அமைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை ' என தெரிவித்தனர். தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். நேற்று(நவ.,11) மாலைக்குள் ஆதரவு கடிதம் கொடுக்கும்படி சிவசேனா தலைவர்களுக்கு கவர்னர் கெடு விதித்தார்.


அவகாசம் அளிக்க மறுப்பு


தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேறியது. மேலும், உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. தொடர்ந்து சிவசேனா கட்சியினர் , ஆட்சி அமைக்க கால அவகாசம் கோரினர். ஆனால், அதற்கு கவர்னர் மறுத்துவிட்டார். தொடர்ந்து தேசியவாத காங்கிரசுக்கும் ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், அக்கட்சி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.






பரிந்துரை


மஹாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்: மஹாராஷ்டிராவில் சட்டப்படி ஆட்சி அமைக்க இயலாத சூழல் உருவானதாகவும், இதனால் அரசியல்சட்டப்பிரிவு 356வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.


ஒப்புதல்


இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். இதனையடுத்து, மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.


வழக்கு

மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.சிவசேனா சார்பில், காங்., கட்சியின் கபில் சிபல் தாக்கல் செய்த மனுவில், பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் ஏதும் கவர்னர் வழங்கவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி தலைமை நீதிபதியை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (120+ 80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
13-நவ-201903:53:54 IST Report Abuse
Ramasami Venkatesan காங்கிரசின் கூட்டோ அல்லது காங்கிரசின் ஆதரவாலோ ஆட்சி அமைத்த கட்சிகளின் அவல நிலை நாம் அறிந்ததே - தமிழகம், கர்நாடகா, இப்போது மகராஷ்டிரா. அழிவு என்று தெரிந்தும் சேரும் கட்சிகளுக்கு என்ன சொல்ல, பேராசை பெரு நஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
13-நவ-201901:29:00 IST Report Abuse
Mithun பால் தாக்ரேஜியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரான சிவசேனாவின் அரசியல் சரிவு தொடங்கிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
12-நவ-201923:19:05 IST Report Abuse
Rajas ஒரு பத்திரிகையில் வந்தது. ஆட்சியே அமைக்க முடியாது என்று சொல்வதற்கும் ஆட்சி அமைப்பதற்கு நேரம் தேவை என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X