பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்ற சிறுவன்: சடுதியில் காப்பாற்றிய நண்பன்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement
ராமநாதபுரம், மாணவன்,  தூக்கு, நண்பன்,

இந்த செய்தியை கேட்க

ராமநாதபுரம்: மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற 8 ம் வகுப்பு மாணவரை சக மாணவர் உடனே காப்பாற்றினார். மாணவரின் துணிச்சலை, மாவட்ட எஸ்.பி., மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.




ராமநாதபுரத்தில், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற 8 ம் வகுப்பு மாணவனை சக மாணவன் வடிவேலன், உடனடியாக காப்பாற்றினான். மாணவனின் துணிச்சலை, மாவட்ட எஸ்.பி., வருண்குமார், மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பேரையூர் அருகேயுள்ள பகுதி கருங்குளம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தனது தந்தை உடல்நலக்குறைவால், உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த மாணவர் நேற்று(நவ.,11) பள்ளியில் உள்ள மரக்கிளையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை, அப்பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் கருங்குளத்தை சேர்ந்த அவரது நண்பரான வடிவேலன் என்ற மாணவர் பார்த்தார்.




உடனே, தற்கொலைக்கு முயன்ற மாணவரை தோளில் தூக்கியதுடன் கூச்சல் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறித்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., வருண்குமார், வடிவேலனை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பொதுமக்களும் பாராட்டினர்.




Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
13-நவ-201910:11:24 IST Report Abuse
Charles என்ன மனிதாபி மானம், சமயோஜிதம், துணிச்சல், இந்த வயதில். நாடே இவனை பாராட்ட வேண்டும். அவன் படிப்பு செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும். ஒரு உயிருக்கு விலை ஏது. பழனிச்சாமி ஒரு சிறுவனின் மரணத்திற்கு அரசாங்கத்தின் ரூபாய் 20 லட்சத்தை அவனின் பெற்றோர்களிடம் கொடுக்க வில்லையா ??
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-நவ-201904:59:51 IST Report Abuse
 nicolethomson நண்பேன்டா
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
12-நவ-201920:08:44 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த சமயோசிதம் பாராட்டுக்குரியது. வாழ்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X