அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிவாஜி, கமல், ரஜினி: வம்புக்கு இழுக்கும் எடப்பாடி

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (84)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: வயதான பின் கட்சி ஆரம்பிக்கும் கமல், ரஜினி போன்றோருக்கு சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும் என முதல்வர் பழனிசாமி கூறியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வரின் இந்த பேச்சு, சிவாஜி, கமல், ரஜினி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.





நடிகர் கமல், கடந்தாண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்தார். நடிகர் ரஜினி, விரைவில் கட்சி துவங்க இருக்கிறார். இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களாக கருதப்படும் இருவரும் அரசியலுக்குள் நுழைவதால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோருக்கு வயிற்றில் புளியை கரைத்தது. இதன் வெளிப்பாடாக இவர்கள் கமல், ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தனர். தற்போது இந்த வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துள்ளார்.




சேலத்தில் பழனிசாமி கூறியதாவது: வயது உள்ளவரை படத்தில் நடித்து வருமானத்தை ஈட்டிவிட்டு, கமல், ரஜினி போன்றோர்கள் கட்சி ஆரம்பிக்கின்றனர். வயதான பின் கட்சி ஆரம்பித்த சிவாஜியின் நிலைமை தான் அவர்களுக்கும் ஏற்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.


கண்டனம்

இதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை, எம்ஜிஆரும் வயதாகிய பின் தான் கட்சி ஆரம்பித்தார். அப்படியிருக்கையில் சிவாஜியை குறிப்பிட்டு கிண்டலடிப்பதை கடுமையாக கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதால், பழனிசாமி நம்பிக்கையுடன் பேசுவதாக அக்கட்சி தொண்டர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-201923:10:35 IST Report Abuse
கோகுல், மதுரை சிவாஜி வந்த பொழுது கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இருந்தனர். போததற்கு ஜானகி அவர்களுக்கு எம்ஜிஆரின் அனுதாப ஓட்டுக்கள். இந்த களேபரத்தில் சிவாஜி காணாமல் போனார். இப்பொழுது உள்ள முதல்வரை பெரும்பாலான மக்களுக்கு யாரென்றே தெரியாமல் இருந்தது. அதனால் தான் பாராளுமன்ற தேர்தலில் ஒரளவு தெரிந்த முகமான ஸ்டாலினுக்காக திமுகவுக்கு ஓட்டளித்தனர். பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ரஜினி என்ற மாபெரும் சக்தி வரும் போது இந்த இருவரும் விலாசம் இழப்பது உறுதி.
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
13-நவ-201901:01:01 IST Report Abuse
Balajiஜிவாஜியா அதுக்கு முன்னாடி வரக்கூடாதுன்னு யாரும் சொல்லல. காங்கிரஸ் லோ பட்டு படாம கைக்காசுக்கு பாதகமில்லாத அளவுக்கு அரசியல் செஞ்சிகிட்டு தான் இருந்தார். சும்மா பேசப்படாது......
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
12-நவ-201921:36:01 IST Report Abuse
Subburamu Krishnaswamy Sivaji Ganesan was a very good actor, nobody can dispute it. But he was a miser, he had not spent his hard earned money for public cause significantly. But MGR is a different person, may be his acting is not comparable to Sivaji Ganesan, But he took care of his fellow co-artists, and also poor people in many occasions. May be he had no family commitments to save money. Both the artists had great talents, but in politics MGR out beats Sivaji Ganesan.
Rate this:
Share this comment
raja - Kanchipuram,இந்தியா
28-நவ-201916:57:52 IST Report Abuse
rajatry to find out from your ancestors Sivaji or MGR who donated more from their earned money. Sivaji never advertised his doings like MGR. Please go through the truth before putting any words against any good person....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
12-நவ-201921:27:47 IST Report Abuse
Balaji முதல்வர் சொல்லி இருப்பதை தவறில்லை. MGR மக்களை அணுகிய விதம் வேறு. சிவாஜி கமல் ரஜினி போன்றோர் மக்களை அணுகும் விதம் வேறு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. அப்படி இருக்க MGR எந்த வயதில் கட்சி ஆரம்பித்தார் என்பதற்கான ஆராய்ச்சி தேவையில்லாத ஒன்று. ஆனால் மக்களை சற்று தள்ளியே வைத்திருந்த சிவாஜி கமல் போன்றோரும், என்ன செய்கிறார் என்பதே மக்களுக்கு விளங்காத நிலையில் உள்ள ரஜினியும் இப்படி இடப்படியால் விமர்சனத்துக்குள்ளாவதில் தவறில்லை. அவர்களே உண்மையிலேயே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டியது தான் காலத்தின் கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X