பொது செய்தி

தமிழ்நாடு

போலி கையெழுத்து: வி.சி., கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது

Added : நவ 12, 2019 | கருத்துகள் (8)
Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் சசி வர்ணம். இவரின் வீட்டு பத்திரம் தொலைந்து போனதால், நகல் பத்திரம் பெறுவதற்காக அதே பகுதியை சேர்ந்த பாண்டி மற்றும் பாலய்யா ஆகிய வக்கீல்களின் உதவியை நாடினார். இதில், பாலய்யா விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஆவார். நகல் பத்திரம் பெறுவதற்காக ஆட்சேபனை சான்றிதழை பெற்று தந்துள்ளனர்.

அதை வாங்கிக்கொண்டு இளையான்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சசிவர்ணம் கொடுத்துள்ளார். அதில், இன்ஸ்பெக்டர் சீல் பதிவாகி, எஸ்.ஐ., சிவம் என்பவரது கையெழுத்து இருந்ததால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், எஸ்.ஐ.,யிடம் காண்பித்து வருமாறு கூறியுள்ளனர். இதனை பார்த்த எஸ்.ஐ., தன்னுடைய கையெழுத்து இல்லை எனக்கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார். இதில், பாண்டி, பாலய்யா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-நவ-201922:58:46 IST Report Abuse
madhavan rajan இப்படிப்பட்டவர்கள் பஞ்சமி நிலத்துக்கு வேறு போராடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
12-நவ-201921:05:55 IST Report Abuse
blocked user சுடலைக்கு உதவ விசிக மொக்கைகள் காத்திருக்கிறார்கள் போல தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
12-நவ-201920:46:09 IST Report Abuse
 Sri,India அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X