death sentence of Punjab ex CM's killer to life | பயங்கரவாதியின் தூக்குதண்டனை குறைப்பு| Dinamalar

பயங்கரவாதியின் தூக்குதண்டனை குறைப்பு

Added : நவ 12, 2019 | கருத்துகள் (3)
Death Sentence,Punjab,CM,Beant Singh,Killer,Life Term,பஞ்சாப்,முதல்வர், ஆயுள், தூக்கு, குறைப்பு

புதுடில்லி: பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பியந்த் சிங், கடந்த 1995ல் சண்டிகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். திலாவர் சிங் என்ற போலீஸ் அதிகாரி நடத்திய இத்தாக்குதலில், முதல்வருடன் சேர்ந்து 17 பேர் பலியாயினர். இதில் 2வது மனித வெடிகுண்டாக இருந்த பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார். இவர்கள் பப்பர் கல்சா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட பியந்த் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, மனிதாபிமான நடவடிக்கையில், பல்வந்த் சிங்கின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X