பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில்; ஆசிரியையின் 27 ஆண்டு விரதம்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (28)
Advertisement
woman,27 years,fast,Ayodhya,அயோத்தி,தீர்ப்பு,ராமர் கோவில்,27 ஆண்டு, விரதம், dinamalar, தினமலர்

புதுடில்லி: அயோத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டி, ம.பி., ஆசிரியை ஒருவர் கடந்த 27 ஆண்டுகளாக விரதம் இருந்து வந்துள்ளார்.

ம.பி., மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (81). சமஸ்கிருத ஆசிரியையான இவர், தீவிர ராம பக்தர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி, இவர் கடந்த 27 ஆண்டுகளாக விரதம் இருந்து வருகிறார். பால், பழம் மட்டுமே ஆகாரமாக உட்கொண்டு விரதத்தை கடைபிடித்த இவருக்கு, சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





இதுகுறித்து ஊர்மிளாவின் மகன் கூறுகையில், '1992ல் பாபர் மசூதி இடிப்பு சம்பவம், என் தாய்க்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை, விரதம் இருக்க உறுதி பூண்டார். இதன்படி, கடந்த 27 ஆண்டுகளாக, பால் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்கிறார். என் அம்மாவின் ஆசை நிறைவேறியதால், விரைவில் விழா எடுத்து அவரது விரதத்தை முடிக்க முடிவு செய்துள்ளேன்' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
13-நவ-201909:26:33 IST Report Abuse
TechT 27....வருடம் ...அப்புறம் .... தெய்வத்தை வைத்து விளம்பரம் நன்றன்று .
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13-நவ-201906:24:06 IST Report Abuse
 N.Purushothaman அவரின் 54 வயதில் இருந்து இந்த விரத முறையை ஆரம்பித்து உள்ளார் ....நம்மால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பால் பழங்கள் சாப்பிட்டு வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் இருக்க முடியுமா ? இது நிச்சயம் அந்த ஸ்ரீ ராமனின் கருணையே ....அவரின் மன உறுதிக்கும் ,இந்த கடினமான விரதத்திற்கும் அவரை நமஸ்கரிக்கிறேன் ... அவரின் மகன் போற்றுதலுக்குரியவர் ..... அயோத்தியில் கோயில் அமைந்தவுடன் அவரை அங்கு கூட்டி சென்று தரிசனம் செய்ய வைக்க வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
13-நவ-201905:18:14 IST Report Abuse
Balasubramanian உங்களில் நாங்கள் அந்த சபரியையே காண்கிறோம் அவருக்கு அருள் தந்த ராமன் உங்களுக்கும் நிச்சயம் அருள்வான். உங்களை போன்றவர்கள் மூலமாக நாங்களும் அவன் தரிசனம் பெற காத்திருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X