ரூ.1.75 லட்சத்தை ஒப்படைத்த கைதிகள் பொதுமக்கள் பாராட்டு

Added : நவ 12, 2019 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுக்கோட்டை : புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில், வாடிக்கையாளர் தவறவிட்ட, 1.75 லட்சம் ரூபாயை, அங்கு பணியாற்றும் கைதிகள் இருவர் எடுத்து, உரியவரிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகில், சிறைத்துறை சார்பாக, ஐ.ஓ.சி., நிர்வாகத்தால், பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது.புதுக்கோட்டை சிறையில் உள்ள, தண்டனைக் கைதிகளில், நன்னடத்தை சான்று பெற்ற, 25க்கும் மேற்பட்ட

புதுக்கோட்டை : புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில், வாடிக்கையாளர் தவறவிட்ட, 1.75 லட்சம் ரூபாயை, அங்கு பணியாற்றும் கைதிகள் இருவர் எடுத்து, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகில், சிறைத்துறை சார்பாக, ஐ.ஓ.சி., நிர்வாகத்தால், பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது.புதுக்கோட்டை சிறையில் உள்ள, தண்டனைக் கைதிகளில், நன்னடத்தை சான்று பெற்ற, 25க்கும் மேற்பட்ட கைதிகள், அந்த பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகின்றனர்.இங்கு, இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப, நேற்று அதிகாலை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜானகிராமன், 30, என்பவர் வந்துள்ளார். அங்கு அவர், தன் கைப்பையை தவறவிட்டு சென்றார்.இந்த கைப்பையை கண்டெடுத்த, பங்க்கில் பணியாற்றும் கைதிகள் புஷ்பகுமார், 35, கார்த்திக், 36, ஆகியோர், அதை திறந்து பார்த்துள்ளனர்.

அதில், பணம் இருந்தது. உடனடியாக, அந்தப் பணத்தை, சிறைத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில், 1.75 லட்சம் ரூபாய் இருந்தது. கைப்பையில் இருந்த தகவல் வழியாக, ஜானகிராமனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.பணத்தை காணாமல் தவித்த அவர், உடனடியாக, பெட்ரோல் பங்க் வந்தார். சிறைத்துறை போலீசார், அவரிடம் ஒப்படைத்தனர். பெட்ரோல் பங்க்கில் தவற விட்ட பணத்தை எடுத்துக் கொடுத்த கைதிகளுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.மேலும், புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, அவர்களை பாராட்டி, வெகுமதிவழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
13-நவ-201919:08:45 IST Report Abuse
ராஜேஷ் தான் இவளது கஷ்டத்தில் கைதியாக இருந்தாலும் உங்கள் நேர்மை மிகவும் வணக்கத்தக்கது . இவர்களை ஏன் விடுதலை செய்ய கூடாது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X