பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement
Coimbatore,girl,producing,reusable,cotton,sanitary napkins, napkins, பருத்தி நாப்கின், அசத்தும், கோவை, இளம்பெண், தினமலர், dinamalar

கோவை: துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், பருத்தி 'நாப்கின்'னை தயாரித்து கோவையை சேர்ந்த இளம்பெண் அசத்தி உள்ளார். இவை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





கோவை கணபதியை சேர்ந்தவர் இஷானா(18), தையலில் டிப்ளமோ முடித்துள்ளார். தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், புதுமையான முயற்சியில் ஈடுபட விரும்பி, மக்கும் பருத்தி துணிகளால் ஆன 'நாப்கின்'னை தயாரித்து அசத்தி உள்ளார். துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என அவர் தெரிவித்தார். இந்த 'நாப்கின்' பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





இதுகுறித்து இஷானா கூறியதாவது: சாதாரண நாப்கின்களில் உள்ள கெமிக்கல் ஜெல், பெண்களின் உடல்நலத்தில் கேடு விளைவிக்கக் கூடியது. நான் உருவாக்கும் 'நாப்கின்', பருத்தி துணியால் ஆனது. இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவையாகவும் இருக்கும்.





சாதாரண நாப்கின்களை பயன்படுத்துவதால், எனக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டது. இதனால் தான் பருத்தியால் ஆன 'நாப்கின்'களை தயாரிக்கும் உத்வேகம் எனக்கு ஏற்பட்டது. இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை மேலும் பலருக்கு கற்றுத் தர விருப்பப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
13-நவ-201912:35:04 IST Report Abuse
konanki வாழ்த்துக்கள் சகோதரி . உங்கள் பணி நல்ல முறையில் தொடர பிரார்த்தனைகள்
Rate this:
Share this comment
Cancel
SRINIVASAN K R - SALEM ,இந்தியா
13-நவ-201911:29:37 IST Report Abuse
SRINIVASAN K R சாதாரண நாப்கின்களை பயன்படுத்துவதால், எனக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டது. இதனால் தான் பருத்தியால் ஆன 'நாப்கின்'களை தயாரிக்கும் உத்வேகம் எனக்கு ஏற்பட்டது. இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை மேலும் பலருக்கு கற்றுத் தர விருப்பப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். - தினமலர் நிர்வாகத்திற்கு தொடர்பு கொள்ள விபரம் தரவும்.
Rate this:
Share this comment
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
13-நவ-201910:21:14 IST Report Abuse
Prof. A.Venkateswaran. has she applied for patent for her product? if not, pl. ask the reporter of this article to advise her to do so.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X