பருத்தி நாப்கின்; அசத்தும் கோவை இளம்பெண்| Coimbatore girl producing reusable cotton napkins | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (13)
Share
கோவை: துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், பருத்தி 'நாப்கின்'னை தயாரித்து கோவையை சேர்ந்த இளம்பெண் அசத்தி உள்ளார். இவை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கோவை கணபதியை சேர்ந்தவர் இஷானா(18), தையலில் டிப்ளமோ முடித்துள்ளார். தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், புதுமையான முயற்சியில் ஈடுபட விரும்பி, மக்கும் பருத்தி துணிகளால் ஆன
Coimbatore,girl,producing,reusable,cotton,sanitary napkins, napkins, பருத்தி நாப்கின், அசத்தும், கோவை, இளம்பெண், தினமலர், dinamalar

கோவை: துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், பருத்தி 'நாப்கின்'னை தயாரித்து கோவையை சேர்ந்த இளம்பெண் அசத்தி உள்ளார். இவை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil newsகோவை கணபதியை சேர்ந்தவர் இஷானா(18), தையலில் டிப்ளமோ முடித்துள்ளார். தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், புதுமையான முயற்சியில் ஈடுபட விரும்பி, மக்கும் பருத்தி துணிகளால் ஆன 'நாப்கின்'னை தயாரித்து அசத்தி உள்ளார். துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என அவர் தெரிவித்தார். இந்த 'நாப்கின்' பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து இஷானா கூறியதாவது: சாதாரண நாப்கின்களில் உள்ள கெமிக்கல் ஜெல், பெண்களின் உடல்நலத்தில் கேடு விளைவிக்கக் கூடியது. நான் உருவாக்கும் 'நாப்கின்', பருத்தி துணியால் ஆனது. இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவையாகவும் இருக்கும்.


latest tamil newsசாதாரண நாப்கின்களை பயன்படுத்துவதால், எனக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டது. இதனால் தான் பருத்தியால் ஆன 'நாப்கின்'களை தயாரிக்கும் உத்வேகம் எனக்கு ஏற்பட்டது. இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை மேலும் பலருக்கு கற்றுத் தர விருப்பப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X