அரசியல் செய்தி

தமிழ்நாடு

7 மாவட்ட திமுக செயலர்கள் மாற்றம்

Added : நவ 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
உடல் நலக்குறைவு காரணமாக, செயல்பட முடியாமல் இருக்கிற மாவட்டச் செயலர்கள், ஏழு பேர் மாற்றப்பட உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல் நலக் குறைவு காரணமாக, சில மாவட்டச் செயலர்கள், ஆளுங்கட்சி மாவட்டச் செயலர்களுக்கு இணையாக, கட்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். சில மாவட்டச் செயலர்கள், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கட்சியை பலவீனப்படுத்தி உள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாக, செயல்பட முடியாமல் இருக்கிற மாவட்டச் செயலர்கள், ஏழு பேர் மாற்றப்பட உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலக் குறைவு காரணமாக, சில மாவட்டச் செயலர்கள், ஆளுங்கட்சி மாவட்டச் செயலர்களுக்கு இணையாக, கட்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். சில மாவட்டச் செயலர்கள், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கட்சியை பலவீனப்படுத்தி உள்ளனர். அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, கட்சியை வளர்க்காமல், கோஷ்டிகளை மட்டும், சிலர் வளர்த்து வருகின்றனர்.

சமீபத்தில், சென்னையில் நடந்த, தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், கோஷ்டிகள் அதிகமாக வளர்ந்து விட்டதாக, வெளிப்படையாக குற்றம் சாட்டினர். அதனால் கோபமடைந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'கட்சி நலனுக்காக, சர்வாதிகாரியாக மாறுவேன்' என, எச்சரித்தார்.எனவே, கட்சியில் செயல்படாத, ஏழு மாவட்டச் செயலர்களின் பதவிகளை பறித்து, பொறுப்பாளர்களை நியமிக்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், கட்சி நிர்வாகத்தில், அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
13-நவ-201911:23:49 IST Report Abuse
Harinathan Krishnanandam பழைய தலைவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் ஆக இருப்பதால் இனி புதிதாக பதவிக்கு வரும் அனைவரும் 70 வயது அல்லது ஒரு வருடம் தொடர்ந்து நோய் வாய்ப்பட்டு இருந்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்த பதவி அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தரப்படும் என கழக சட்ட திட்டங்கள் உடனடியாய் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என அறிவிக்கப்படுகிறது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-201906:50:17 IST Report Abuse
Bhaskaran முதலில் ஒருத்தர் அப்பொல்லோவுக்கும் கோட்டூர்புரத்துக்கும் ஷண்டிங் அடிக்கிறார் அவருக்கு ஓய்வுகொடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X