எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

டிச., 21ல் முடிகிறது விதிமீறல் கட்டட கெடு

Updated : நவ 13, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
டிச., 21ல் முடிகிறது விதிமீறல் கட்டட கெடு

விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான, சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கால அவகாசம், டிச., 21ல் முடிகிறது.

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை, வரன்முறை செய்வதற்கான திட்டம், 2017 ஜூன், 22ல் அறிவிக்கப் பட்டது. இத்திட்டம், ஆறு மாதத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என, கூறப்பட்டது. விண்ணப்பங்கள் வரத்து குறைவால், திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப் பட்டது.

இதன்படி, ஜூனில் வழங்கப்பட்ட ஆறு மாத கால அவகாசம், டிச., 21ல் முடிகிறது. இதனால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா என்பதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்த, 29 மாதங்களில், 10 ஆயிரம் பேருக்கு குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், இத்திட்டத்துக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது, கேள்விக்குறியாகி உள்ளது. இத்திட்டம் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி, விதிமீறல் கட்டட உரிமையாளர்கள், அமலாக்க பிரிவு நடவடிக்கையை தவிர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், விதிமீறல் கட்டடங்கள் விஷயத்தில், முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாய சூழல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-நவ-201918:44:22 IST Report Abuse
J.Isaac விதி மீறல் பண்ணுவதே ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் அன்டு டெவலப்பர்ஸ் தான்
Rate this:
Share this comment
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
13-நவ-201911:36:15 IST Report Abuse
Sathiamoorthy.V பெரிய பெரிய கட்டிடங்களை விடுங்க, அரை மனை, ஒருமனைகளை வைத்திருக்கும் நடுத்தர மக்களின் உயிரை ஏன் வாங்குகிறார்கள். ஓஆன்லைனில் சமர்பித்ததற்கு ஒரு பதிலையும் காணோம். நேரடியாக டீல் போட வேண்டும் என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல், காசு பார்க்க நினைக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X