அரசியல் செய்தி

தமிழ்நாடு

துணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார்.நேற்று, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா
OPS, துணை முதல்வர், சிறப்பு பதக்கம்

சென்னை : மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார்.நேற்று, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

விழாவில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கத்தை, 86 வயதான பிரதாப் சிங் வழங்கினார். துணை முதல்வரின் மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமாருக்கு, மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரம், நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. அதேபோல, சிகாகோ நகரில் உள்ள, இந்திய துாதரகத்தில் நடந்த கலந்துரையாடலில், துணை முதல்வர் பங்கேற்றார்.

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில் துவங்க தமிழகம் வருமாறு, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்நிகழ்ச்சியில், இந்திய துாதரக அதிகாரி சுதாகர் தலேலா, தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
13-நவ-201917:38:44 IST Report Abuse
s t rajan உள்ளூரில் வாசமில்லா பன்னீர் வெளிநாட்டில் மணக்கிறதோ என்ன காமெடி சார் இது ?
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-நவ-201914:12:39 IST Report Abuse
Yaro Oruvan எல்லாரும் பாத்துக்கோங்க நானும் சூட் கோட் போட்டுட்டேன்..எல்லாரும் பாத்துக்கோங்க.. பாத்துக்கோங்க.. ஆமாம்
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
13-நவ-201907:49:09 IST Report Abuse
மணி ஜி சார்..இங்க எங்கயாவது எங்கப்பாவுக்கு ஒரு டாக்டர் பட்டம் ஏற்பாடு பண்ணித்தரமுடியுமா? பழனி ஏற்கனவே வாங்கிட்டாரு, பெரிய கவுரவ பிரச்னையா இருக்குது ஜி சார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X