பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு நிதியின்றி கலெக்டர்கள் தவிப்பு

Updated : நவ 13, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகளை செய்ய, நிதி இல்லாததால், மாவட்ட நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.தமிழகத்தில், 2016 முதல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய அரசு நிதி வழங்குவதை குறைத்து விட்டது. இதனால், பல உள்ளாட்சி அமைப்புகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தேர்தல், நிதி, கலெக்டர்கள், தவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகளை செய்ய, நிதி இல்லாததால், மாவட்ட நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.

தமிழகத்தில், 2016 முதல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய அரசு நிதி வழங்குவதை குறைத்து விட்டது. இதனால், பல உள்ளாட்சி அமைப்புகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் கிடைக்கும் வரி வருவாயை பயன்படுத்தி, நிலைமை சமாளிக்கப் படுகிறது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், நிதி நிலைமை படுமோசமாக உள்ளது.

இதனால், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி மற்றும் ஆணையத்தின் செயலர் எஸ்.பழனிசாமி ஆகியோர், நாள்தோறும் பல உத்தரவுகளை போட்டு வருகின்றனர்.

இதற்கான நிதி ஒதுக்கப்படாததால், மாவட்ட நிர்வாகங்கள் திணறுகின்றன. தேர்தல் முன்னேற்பாடுகளை செய்ய, உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்கள் சிலர், நேரடியாகவே ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு, ஆணையத்தில் இருந்து, உரிய பதில் இல்லாததால், மாவட்ட கலெக்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-நவ-201918:30:50 IST Report Abuse
J.Isaac ஆளுநரில் இருந்து முதல் அமைச்சர் ,அமைச்சர்கள் ,அரசு அதிகாரிகள்,அலுவலர்கள் சம்பளத்தை குறைத்தால் நிதியும் நீதியும் கிடைக்கும்
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
13-நவ-201918:23:33 IST Report Abuse
sampath, k Huge salary, many retirement benefits, no ceiling in pension payment, but five days work. All income going to govt. Employees. Review is absolutely required. But, for want of votes, nobody will take of this matter. First of all, all indians should be treated as equal atleast after 65 years
Rate this:
Cancel
13-நவ-201909:46:37 IST Report Abuse
ருத்ரா போட்டதை பல மடங்கு எடுக்கத்தானே தேர்தல் தொழிற்சாலை. தேவைக்கு மேல் சேர்த்தவைகளை முதலீடு செய்யலாம். எந்த காரணம் கொண்டும் டாஸ்மாக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளவும். நிதி பற்றாக்குறை வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X