வகுப்பறையில் ஆசிட் வீச்சு:51 மாணவர்கள் காயம்| Dinamalar

வகுப்பறையில் ஆசிட் வீச்சு:51 மாணவர்கள் காயம்

Added : நவ 13, 2019

பீஜிங்: கிழக்காசிய நாடான சீனாவின் யுனான் மாகாணத்தில், காயூவான் என்ற இடம் உள்ளது. இங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில், நேற்று முன் தினம் புகுந்த மர்ம நபர், வகுப்பறையில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இதில், 51 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் காயம் அடைந்தனர். இதில், இரண்டு மாணவர்களின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். அமிலம் வீசியவரை, போலீசார் கைது செய்தனர். அவர், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X