தேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை

Added : நவ 13, 2019 | கருத்துகள் (16)
Advertisement
தேர்தல் ,கமிஷனர்  மகன் ,விசாரணை

புதுடில்லி:மத்திய தேர்தல் கமிஷனர் அசோக் லாவசாவின் மனைவியைத் தொடர்ந்து, அவருடைய மகன் ஆபிர் மற்றும் அவருடைய நிறுவனம், அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதா என்பது தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.
முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவசா, 2018ல் மத்திய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்தாண்டு லோக்சபாவுக்கு நடந்த தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.






இவற்றை விசாரித்த, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் ஒரு கமிஷனர், இந்தப் புகார்களை நிராகரித்தனர். ஆனால், தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அசோக் லாவசாவின் மனைவி, நோவல் சிங்கால் லாவசா, வருமான வரி கணக்கு தாக்கலில் தகவல்களை மறைத்ததாக, வருமான வரித் துறை குற்றஞ்சாட்டியது. முன்னாள் வங்கி அதிகாரியான நோவல், பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். ஆனால், அந்தத் தகவல்களை மறைத்ததாக, வருமான வரித் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் லாவசாவின் மகன் ஆபிர், அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 'பெமா' எனப்படும் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ், இதை விசாரிக்கிறது. ஆபிருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரீஷியசில் இருந்து, 7.25 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பெமா சட்டத்தை மீறி, இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-நவ-201914:27:29 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ் கால் வருடிகள் பாஜக பழிவாங்கல் -ன்னுதான் சொல்ல முன்வருதே தவிர இவரு செஞ்சிருக்க மாட்டாரு -ன்னு சொல்லல ..... வெட்டிகள் .....
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
13-நவ-201911:58:10 IST Report Abuse
Suri நாடு பாசிசம் நோக்கி செல்கிறது என்பதற்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் தெளிவாக்குகிறது. இதே தேர்தல் கமிஷன் சிக்கிம் ஊழல் பெருச்சாளியை 6 வருட தேர்தல் போட்டி தடையில் இருந்தும் தப்பிக்க வைத்தது முதல் அமைச்சராக பதவி ஏற்க வழி வகுத்தது. மோடியின் ஜனநாயகம் வாழ்க. இதை கூறினால் காங்கிரஸ் இதை செய்யவில்லையா.. அதை செய்யவில்லையா என்று ஒரு கோஷ்டி வரிந்து கட்டும். இவர்கள் தான் காங்கிரஸில் இருந்து வேறுபட்டு வேறு ஒரு கிரகத்தில் இருந்து தானே இறங்கினார்கள்?? இவர்கள் ஏன் காங்கிரஸ் செய்த அதே காரியத்தை விட மட்டமாக செயகிறார்கள்????
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201908:45:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எழுபதாண்டில் நடந்த அக்கிரமங்களை ஏழே ஆண்டில் அதை விட ஏழு மடங்கு வீரியத்துடன் செய்கிறது இன்றைய பாஜ அரசு....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201908:47:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எழுபது ஆண்டுகளில் நடந்த அக்கிரமங்களை ஏழாண்டுகளில் ஏழு மடங்கு வீரியத்துடன் செய்கிறது பாஜக.....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201908:47:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எழுபது ஆண்டுகளில் நடந்த அக்கிரமங்களை ஏழாண்டுகளில் ஏழு மடங்கு வீரியத்துடன் செய்கிறது பாஜக பா சி ச அரசு.....
Rate this:
Share this comment
Cancel
வடநாட்டு நக்கி மோடி வாழ்க..ஹே ஹே ஹே..சிபிஜ வாழ்க..தேர்தல் கமிசன் வாழ்க..சுப்ரீம் கோர்ட் வாழ்க..ரிசர்வ் பேங்க் வாழ்க..ஹே ஹே ஹே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X