ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாம்பர் எனப்படும் மிகப்பெரிய ஏரி உள்ளது. உப்பு நீர் ஏரி என அழைக்கப்படும் இந்த ஏரி 30 கி.மீ. நீளம் கொண்டது என கூறப்படுகிறது.
இந்த ஏரிக்கு ஆண்டு தோறும் 20 வகையான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். ஆயிரக்கணக்கான பறவைகள் வருவதால் அதனை பார்ப்பதற்கு இப்பகுதி வாசிகள் கூடுவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக 1500 க்கும் மேற்பட்ட அரிய பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தன. தகவலறிந்த கால்நடைத்துறையினர் இறந்த பறவைகளை ஆய்வு செய்தனர். ஏரியில் உள்ள நீர் பெருமளவு மாசடைந்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE