பொது செய்தி

இந்தியா

மீண்டும் டில்லியில் காற்று மாசு தீவிரம்:அவசர நிலை அறிவிக்க வாய்ப்பு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 10 நாட்களுக்கு முன் தலைநகர் டில்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு டில்லி முழுவதும், புகை மண்டலமாக காட்சி அளித்தது. மூச்சு திணறல் பிரச்னையால், பள்ளி செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பலர் முக கவசம் அணிந்தபடி அன்றாட பணிகளை மேற்கொண்டனர். தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், காய்ந்து போன பயிர்களை
மீண்டும் டில்லி,காற்று மாசு ,தீவிரம்

புதுடில்லி: கடந்த 10 நாட்களுக்கு முன் தலைநகர் டில்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு டில்லி முழுவதும், புகை மண்டலமாக காட்சி அளித்தது. மூச்சு திணறல் பிரச்னையால், பள்ளி செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பலர் முக கவசம் அணிந்தபடி அன்றாட பணிகளை மேற்கொண்டனர். தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், காய்ந்து போன பயிர்களை எரித்ததுமே, இந்த காற்று மாசுக்கு காரணம் என, கூறப்படுகிறது.


latest tamil news


காற்று மாசின் தரக்குறியீடு, 0 - 50 புள்ளிகள் வரை இருந்தால், ஆபத்தில்லை என கருதப்படுகிறது. அது, 201 - 400 புள்ளிகள் வரை இருந்தால் மிக மோசமான நிலை என்றும், 500 புள்ளிகளை தாண்டினால் அதிதீவிர அபாய நிலை என்றும் அளவுகோள்கள் உள்ளன.
கடந்த 2-ம் தேதியன்று டில்லியின் காற்று மாசின் தரக்குறீயீடு அளவு, 533 புள்ளிகள் என்ற அதிதீவிர அபாய கட்டத்தை தொட்டது. பின், 480 புள்ளிகளாக குறைந்தது. இதனால், டில்லியில், பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (நவ. 12) மாலை 4 மணியளவில் காற்று மாசு 425 புள்ளிகளாக இருந்தது பின்னர் இரவு 9 மணியளவில் 437 அதிகரித்து, இரவு 10 மணியளவில் 484 புள்ளிகளை தொட்டது. இது 500 புள்ளிகளை தாண்டி அதி தீவிர அபாயமாக மாறும் என்பதால் இன்று அவசரநிலை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-நவ-201910:50:33 IST Report Abuse
நக்கீரன் இந்த செய்தி உண்மையானால் அது டெல்லிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கே இயற்கையால் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. புரிந்து கொண்டு தங்களை திருத்திக்கொண்டால் நல்லது
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
13-நவ-201910:16:54 IST Report Abuse
Charles இப்பொழுது தெரிகிறதா தலைவர்கள் ஏன் அடிக்கடி வெளியூர் அல்லது வெளிநாடு செல்கிறார்கள் என்று? இது தமிழ் நாட்டிலேயும் நடக்கிறது தானே
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
13-நவ-201909:01:01 IST Report Abuse
Tamil பனிக்காலத்தில் டெல்லி பனிபடர்ந்து இருக்கும் அதை காற்றுமாசு என்று கதை விடுவதை நிறுத்தவும். இந்த மாசு கதைக்கு பின்னால் பெரிய மருந்து கம்பெனி தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாக இருக்கும். காற்று மாசு வருடம் முழுவதும் அணைத்து பெரிய நகரங்கிலும் உண்டு. பனிக்காலத்தில் பனி அடர்ந்திருப்பதை கற்று மாசு என்று ஏமாற்றி மக்களிடத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது மருத்துவ வணிக நிறுவனங்கள்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
13-நவ-201916:47:40 IST Report Abuse
Girijaஇது தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாடு வாரியம் இல்லை, நாட்டாண்மை வேலை செய்ய. தூத்துக்குடி மக்கள் இப்போ ரொம்ப திடகத்திகிறமாக செழிப்பாக உள்ளனர் என்றால் அதன் பெருமை த்ரவிட கட்சிகளுக்கே , எடப்பாடி நிம்மதியாக பூட்டிவிட்டு, பாவம் அயல்நாடு முதலீட்டுக்கு கோட் சூட் போட்டு அலைகிறார் . பண்ணீரும் அவர் புள்ளையும் கண்ணீர்விட்டு முதலீடு கேட்க சென்றுள்ளனர் , இவர்களும் கோட்டு சூட்டுடன் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X