ஆர்.டி.ஐ., வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

Added : நவ 13, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி,: ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால்
 ஆர்.டி.ஐ., வழக்கு, சுப்ரீம், கோர்ட் இன்று ,தீர்ப்பு

புதுடில்லி,: ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. அதைத் தொடர்ந்து விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 2010ல் தீர்ப்பு அளித்தது. 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும்' என, தீர்ப்பு அளித்தது.


latest tamil newsஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.இந்தாண்டு ஏப்., 4ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பகல், 2:00 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-நவ-201910:34:23 IST Report Abuse
நக்கீரன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மையானால் அனைவரும் RTI சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். வெறும் ஏட்டளவில் மட்டும் சட்டம் இருந்தால் பயனில்லை. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பார்ப்போம் தீர்ப்பு எப்படி வழங்குகிறார்கள் என்று.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
13-நவ-201910:13:28 IST Report Abuse
GMM நிர்வாகத்தில் தான் தகவல் தேவைப்படும். உதாரணமாக: அரசியல் சிபாரிசு மூலம் 99 வருடம் குத்தகைக்கு அரசு இடம் குறைந்த வாடகையில் விதி மீறி கொடுத்தல்/ பதவி உயர்வு இடை வெளி 5 ஆண்டு எனில், விதி மீறி 2 ஆண்டில் அவசரமாக கொடுத்தல் ....... போன்றவற்றை தடுக்க வழக்கிற்கு தகவல் தேவை. நீதிபதி அரசு அதிகாரி. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து, கடன் விவரம் நீதித்துறைக்கும், வருமான விவரங்களை வருமான வரி துறைக்கும் சமர்ப்பிக்க வேண்டும். விதி முறைகளை ஆராய அலுவலர்கள் உள்ளனர். வக்கீல் மனு, வாத, பிரதிவாத குறைகளை நீக்க RTI கீழ் கொண்டு வரலாம். நீதிமன்றத்தை கொண்டு வருவதால் பொது நலம் ஒன்றும் இல்லை. நீதி மன்ற விசாரணை சட்ட விதி ரீதியாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X